சாம்பியன்ஸ் கிண்ணம் - இலங்கை அணியின் போட்டி விபரம்.
இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ணத்துக்காக பெருத்த எதிர்பார்ப்புக்களுடன் அஞ்சேலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நோக்கிய பயணத்தை நாளை ஆரம்பிக்கவுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டி தொடர் ஜூன் மாதம் 18 ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.நாளை காலை 6.30 அளவில் வைபவ ரீதியாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வுக்கு இலங்கை ரசிகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
IPL போட்டிகளில் பங்கெடுத்துவரும் மலிங்க மட்டும் இலங்கை அணியோடு பயணிக்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.இலங்கை அணி ஜூன் 3 ம் திகதி தென் ஆபிரிக்க அணியையும்,ஜூன் 8 ம் திகதி இந்திய அணியையும்,ஜூன் 12 ம் திகதி பாகிஸ்தான் அணியையும் சந்திக்கவுள்ளது.
இலங்கை அணி இடம்பிடித்துள்ள குழு B யில் தென் ஆபிரிக்க , இந்திய பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.குழு A யில் இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இடம்பிடித்துள்ளன.