இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். இது தொடர்பாக போர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் பெரும்பாலான மக்கள் எளிதாக, அதிவேக இணையதள வசதியை பெறும் வகையில் புதிய முயற்சியை மேற்கொண்டதற்காக அவர் இந்த பட்டியலில் முதல் இடத்தை பெற்று இருக்கிறார். எண்ணெய் மற்றும் கேஸ் தொழிலில் பிரபலமான அவர் தற்போது தொலைத் தொடர்பு துறையிலும் கால் பதித்து உள்ளார். அதிக வேக இணையதள வசதியை மிகவும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளார்.
இதனால் 6 மாதத்தில் 10 கோடி பேர் அவர் கொண்டு வந்த ஜியோ இணையதள வசதியில் இணைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டு உள்ளது.இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ள 25 பேரும் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைகளை மாற்றி அமைத்து சாதித்து காட்டியுள்ளனர்.
உடல்நலத்தில் இருந்து பணம் அனுப்புவது வரை அனைத்தையும் அவர்கள் புதுவிதமாக மாற்றி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வகையில் செய்துள்ளனர் என்று போர்ப்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
முகேஷ் அம்பானி தவிர இந்த பட்டியலில் வீட்டு உபயோக பொருள் தயாரிப்பு நிறுவனமான டைசன் நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் டைசன், அமெரிக்க உலகளாவிய முதலீட்டு நிறுவனமான பிளாக் ராக் இணை நிறுவனர் லாரி பிங்க், சவுதி அரேபியாவின் துணை இளவரசர் முகமது பின் சல்மான், சமூக வலைத்தள நிறுவனமான ஸ்நாப் நிறுவனத்தின் துணை நிறுவனர் இவான் ஸ்பீகல், சீனாவின் டிடி சவுச்சிங் நிறுவனர் செங் வாய், ஆப்பிரிக்காவின் சில்லறை வர்த்தக அதிபர் கிறிஸ்டோ வெய்ஸ் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.