எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் சத்ரியன். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ளது. சமீபத்தில் சென்சாருக்கு சென்ற சத்ரியன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது. இதனையடு்த்து படத்தை வெளியீடு செய்ய படக்குழு தீவிரமாக ஈடுபட்டது. இந்நிலையில் ஜுன் 9-ம் திகதி திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்கள் வெளியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.