Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
30
தொடரும் அவலம்: இதுவரை 180 இலங்கையர்கள் பலி (காணொளி)

Weather causes havoc in Sri Lanka - தொடரும் அவலம்: இதுவரை 180 இலங்கையர்கள் பலி (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,509 Views
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, 109 பேர் காயமடைந்துள்ள அதேநேரம், மேலும் 110 பேர் காணமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மொத்தமாக 15 மாவட்டங்களில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபடியான மரணங்கள் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளன. அங்கு இதுவரையில் 77 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் களுத்துறை மாவட்டத்தில் 54 பேரும், மாத்தறையில் 24 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 640 வீடுகள் முற்றாகவும், 5 ஆயிரத்து 329 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. அதேநேரம், பாதுகாப்பான 368 இடங்கில், 76 ஆயிரத்து 902 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக அளவான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு 38 ஆயிரத்து 323 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 692 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 370 பேரும் முகாம்களில் தங்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.



இதேவேளை, மின்சார தடைகள் குறித்த முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கத்தை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, 0113 030 303 என்ற இலக்கத்துக்கு மின் தடை குறித்த தகவல்களை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நிலவும் அனர்த்த நிலைகளை கருத்திற்கொண்டு எட்டு மாவட்டங்களின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிடச் சென்ற ஆறு பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 16 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வேடிக்கை பார்க்கும் நோக்கில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு பிரவேசிப்பதை தவிருக்குமாறும் காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதேவேளை, களனி, களு, ஜின் மற்றும் நில்வளா கங்கைளில் நீர்மட்டம் தற்போது குறைந்து காணப்படுவதாகவும், எனினும் சில தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்தும் அவ்வாறே காணப்படுவாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top