Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
01
உங்களின் மனம் கவர்ந்த நடிகர்களின் படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள் இதோ!

top collection of tamil actors movies - உங்களின் மனம் கவர்ந்த நடிகர்களின் படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள் இதோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18,111 Views

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகரின் மார்க்கெட் என்பது அவரின் முந்தைய படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை பொறுத்து தான். அந்த வகையில் உங்களின் மனம் கவர்ந்த நடிகர்களின் படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதை பார்ப்போம்.

 


ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த கபாலி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நஷ்டம் என்று கூறப்பட்டாலும், இப்படம் உலகம் முழுவதும் ரூ 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இதுவே ரஜினியின் அதிக வசூல் படம்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன் எப்போது வசூலை எதிர்ப்பார்த்து படம் இயக்குபவர் இல்லை, இருந்தாலும், அவரின் படங்கள் ஒருசில வசூலிலும் பிரமாண்ட சாதனை படைக்கும், அப்படி ரூ 200 கோடி வரை வசூல் செய்த படம் விஸ்வரூபம்.

விஜய்

இளைய தளபதி விஜய் இதுவரை 3-க்கும் மேற்பட்ட ரூ 100 கோடி படங்களை கொடுத்தவர், இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தெறி படம் ரூ 150 கோடிக்கு மேல் வசூல் செய்தது இதுவே இவரின் அதிக வசூல் படமாக உள்ளது.

அஜித்

அஜித் படம் என்றாலே பிரமாண்ட ஓப்பனிங் இருக்கும், அப்படி ஓப்பனிங் மட்டுமின்றி குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்கள் பார்த்த வேதாளம் ரூ 127 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதுவே அஜித்தின் அதிக வசூல் திரைப்படம்.

விக்ரம்

விக்ரம் படங்களுக்கு எப்போதுமே சுமாரான வசூல் இருக்கும், ஆனால், இவர் ஷங்கருடன் இணைந்தால் அது வேறு லெவல் தான், அப்படி இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ஐ படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்தது.

சூர்யா

சூர்யா என்றாலே சிங்கம் சீரியஸை மறக்க முடியாது, அப்படி வெளிவந்த சிங்கம்-2 ரூ 110 கோடி வரை வசூல் செய்து, சூர்யாவின் அதிக வசூல் லிஸ்டில் நம்பர் 1 இடத்தில் இருப்பது.

சிம்பு

சிம்புவின் திரைப்பணத்தில் இதுவரை அதிக வசூல் செய்த படம் அச்சம் என்பது மடமையடா தான், இப்படம் ரூ 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தனுஷ்

தனுஷ் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் வேலையில்லா பட்டதாரி, இப்படம் தமிழ், தெலுங்கு சேர்த்து ரூ 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.

ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் பேவரட் கூட்டணி எப்போதும் அவர் அண்ணன் தான், இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தனிஒருவன் ரூ 75 கோடி வரை வசூல் செய்தது, இதுவே ஜெயம் ரவியின் அதிக வசூல் படம்.

ஆர்யா

ஆர்யா கடைசியாக நடித்த எந்த படமும் ஹிட் இல்லை, ஆனால் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ராஜா ராணி ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, இதுவே இவரின் அதிக வசூல் படம். இதுவே இவரின் கடைசி ஹிட்டும் கூட.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி வருடத்திற்கு 6 படம் ரிலிஸ் செய்து அதில் மினிமல் கேரண்டியில் 5 படத்தையாவது ஹிட் கொடுத்துவிடுவார், ஆனால், இவரின் கவண் முதன் முறையாக இவருக்கு பிரமாண்ட வெற்றியை தந்தது, இப்படம் ரூ 40 கோடி வரை வசூல் செய்துள்ளது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் மார்க்கெட் படத்திற்கு படம் வேறு லெவலுக்கு செல்கின்றது, இவரின் ரெமோ தமிழ், தெலுங்கு சேர்த்து ரூ 90 கோடி வசூல் செய்துள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top