Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
02
இசைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Ilaiyaraaja - இசைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,804 Views
கானங்களால் காற்றுக்கு இனிமையும் காதுக்கு செழுமையும் கொடுத்த ராகவேந்தன் இசைஞானிக்கு இன்று பிறந்தநாள்.
இசைஞானிக்கு பிறந்தநாள் என்பதையும்தாண்டி தமிழ்திரையிசை பிறந்த நாள் என்றாலும் அதுவொன்றும் மிகையில்லை.


மக்களின் இசையாக, தமிழரின் ஆதி இசையின் பிரதிபலிப்பாக, உண்மையான கிராமத்து பண்ணாக 1970 களின் நடுப்பகுதியில் அறிமுகமானார் ஓர் இளைஞன்.பஞ்சு அருணாச்சலத்தின் ஆசிர்வாதத்தோடு 'அன்னக்கிளி' திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார் இளையராஜா. மொத்த தமிழ் சினிமா உலகமே திரும்பிப் பார்த்தது.

மாட்டுவண்டி செல்லாத இடத்திற்கும் தன் பாட்டுவண்டியை செலுத்துகிறார் இசைஞானி,பட்டிதொட்டியெங்கும் பம்பரமாக இசைஞானி புகழ் பரவுகிறது.

ஏதோவொரு ஈர்ப்பு, ஏதோவொரு பாசம், ஏதோவொரு காதல்மணம் இசைஞானி இசையில் இருக்கிறது, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் இயதங்களெங்கும் இசைஞானி இசையால் இருப்பிடம்கொள்கிறார்.

கண்ணதாசனின் இறுதிக் காலங்களில் அவரின் ஈடு இணையில்லா கவிதைகளை அற்புதமாக பாடலாக்கிய வரலாறு இளையராஜாவுக்கேயுரியது. கண்ணதாசன் மரணமான பின்னர் அக்கால வைரமுத்துவும் இசைஞானியும் கொடுத்த பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

இவர்கள் காலத்து பாடல்கள் இன்றும் எல்லோர் இதயங்களையும் ஆரத்தழுவவல்லவை.இசைஞானி+வைரமுத்து கூட்டணியில் பாடல்கள் பிறக்காதா என்று ஏங்கித்தவிப்பவர்கள் ஏராளம் ஏராளம்.

260 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் பிறந்த ஒரு கலைஞன் 36 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் , இசையில் புதுபரிமாணமே கொடுத்து மேற்கத்திய இசைக்கு அவன் பிதமாகன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். அவர்தான் மொசார்ட்.

அவன் காலத்து இசைப்பாளர்கள் சொன்னார்கள், "இவனைபோல ஒரு இசைக் கலைஞன் இனி பலநூறு ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை," இன்றும் அந்த இடம் வெற்றிடம்தான். சந்தேகமே இன்றி சொல்லலாம், இந்த நூற்றாண்டின் மொசார்ட் ஒருவர்தான்... அவர்தான் இளையராஜா.
இப்போது கண்ணதாசன் இல்லை, வைரமுத்துவோ இளையராஜாவோடு இணையும் நிலையில் இல்லை.

நல்ல கிராமத்து கவிஞன் இளையராஜாவோடு கைகோர்த்தால்.. கண்ணதாசனின் 'கலைமான்' துள்ளிவரும், வைரமுத்துவின் 'பூங்காற்று திரும்பும்'! ஓலைக் குடிசையில் இருந்து கொட்டும் மழையினை ரசிக்கும் அந்த சுகாந்தம் திரும்பும், மலை உச்சி பனிகாற்று உடலை தழுவ,
வயல்வெளிகள் வனப்பை ரசித்துக்கொண்டே தேநீர் குடிக்கும் அந்த ஏகாந்தம் கிடைக்கும்.

உற்சாகம், சுறுசுறுப்பு, ஓய்வு, ஆறுதல், தைரியம், பக்தி என எல்லாவற்றையும் இசை மூலம் கொடுக்கத் தெரிந்த ஒரு வரத்தினை ஆண்டவன் இசைஞானிக்கு கொடுத்திருக்கின்றான்.
அதனால்தான் எல்லோராலும் எங்கள் இளையராஜா இசைஞானி என்று போற்றப்படுகின்றார்.

பாலசந்தரும், பாரதிராஜாவும், மணிரத்னமும்,ஆர்.சுந்தர்ராஜனும், பாக்யராஜும், மகேந்திரனும், பாலுமகேந்திரா போன்ற திறமைவாய்ந்த இயக்குனர்களும்,ரஜினி, கமல் முதற்கொண்டு அத்தனை முன்னணி நடிகர்களும்,ஏன் கண்ணதாசன், வாலி, வைரமுத்து முதலான பிரபல பாடலாசிரியரும் இளையராஜாவிடம் தொற்றுப்போகிறார்கள், இவர்களை எல்லோரையும் தாண்டி அங்கெ இளையராஜாவின் இசை முந்தி நிற்கிறது எனலாம்.

மானிட உணர்ச்சிகளை இசைமூலம் வெளி கொண்டுவரும் வரம் அவருக்கு சாதாரணம், மேற்கத்திய பியாணோ முதல் மண்பாண்ட கடம் வரை அவர் விரும்பிய இசையை அவருக்காய் இசைக்கும். அது ராஜாவை தவிர யாருக்கும் சாத்தியமில்லை. மானிட வாழ்வின் எல்லா சூழ்நிலைக்கும் அவரின் இசை பொருந்தும்.

தாலாட்டு, மகிழ்ச்சி, சூழ்ச்சி, பாசம்,நேசம், காதல், முதுமை, தோல்வி, வெறுமை, தனிமை, துரோகம், வஞ்சகம் என எல்லா பக்கங்களுக்கும் இசையால் உற்சாகமும், மருந்தும்,ஆறுதலும் தருபவதுதான் அவரது இசை.

மானிட வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இசைத்தவர், அவ்வளவு ஏன் எத்தனை சோகங்கள் இருந்தாலும் அத்தனையையும் காற்றோடு கரைத்துவிடும் சக்தி ராஜாவிடம் இருக்கிறது.

நிச்சயமாக இளையராஜா எனும் அட்சய பாத்திரத்தில் அள்ள அள்ள இசை வந்துகொண்டே இருக்கும் ,அது இன்னுமின்னும் சுரந்து கொண்டே இருக்கும், இன்னும் அவர் கொடுக்கலாம், கொடுக்கமுடியும். செவிவழி இன்பத்தை இன்னுமின்னும் நாம் அனுபவித்து மகிழ்ந்து கொண்டே இருக்கலாம்.

காலத்தால் வென்ற கானங்கள் தந்த எங்கள் ராகவேந்தனுக்கு சூரியனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top