Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
06
கட்டாரில் பணிபுரியும் ஒரு இலட்சத்துக்கும் அதிக இலங்கையர்களின் நிலை என்ன?

Qatar regional issue - கட்டாரில் பணிபுரியும் ஒரு இலட்சத்துக்கும் அதிக இலங்கையர்களின் நிலை என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59,399 Views

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகள், கட்டார் ரியாலை ஏற்க மறுத்துள்ளதால் தற்போது கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 



இதனால் கட்டாரில் பணி புரிந்து மீண்டும் நாடு திரும்புவோர், கடும் சிரமங்களுக்கு உள்ளாகுவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் கட்டார் ரியாலை இலங்கை ரூபாவிற்கு மாற்ற முடியாததால் நாடு திரும்பியுள்ள சிலர், வீடு நோக்கிச் செல்ல முடியாத நிலையிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, விமான நிலையத்தில் உள்ள விற்பனை நிலையங்களிலும் கட்டார் ரியால் நிராகரிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்டார் ரியாலை ஏற்க வேண்டாமென தாம் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை கட்டார் நெருக்கடி நிலையால் இலங்கைக்கு பாதிப்பில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த நெருக்கடி நிலையினால், தமது  பிரஜைகளுக்கோ அல்லது அங்கு தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென கட்டார் அறிவித்துள்ளது.

 கட்டாரில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top