Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jun
15
வேற்று கிரகவாசிகள் உண்டா? அறிவதற்கான நாளை அறிவித்தது நாசா!!

aliens - வேற்று கிரகவாசிகள் உண்டா? அறிவதற்கான நாளை அறிவித்தது நாசா!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,007 Views
இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போன்ற வேறு கிரகங்கள் உண்டா? அந்த கிரகங்களில் மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் உண்டா? அந்த வேற்று கிரகவாசிகள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் நம்மைப்போலவே இருப்பார்களா? என்ற கேள்வி பல காலமாக கேட்கப்படுகிறது.



பூமிக்கு வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு மூலமாக வந்ததாகவும் பரபரப்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாவது உண்டு.

ஹிருத்திக் ரோஷன் நடித்து 2003-ல் வெளிவந்த வேற்று கிரகவாசிகள் பற்றிய ‘கோய் மில் கயா’ இந்தி படம் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் மட்டும் தனியாக இல்லை என்பதை நிரூபிப்பதற்கான முதல் தடயங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தேடி வருகிறது.

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களில் உயிரினம் வாழக்கூடிய அம்சங்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கிறதா என்பதை கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி கொண்டு ‘நாசா’வின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள்.

உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப்படக்கூடிய பல கிரகங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான தனது முடிவுகளை நாசா, வரும் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இலங்கை நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு) அறிவிக்கிறது.

இது, இப்போதே வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்களில் ஆர்வம் காட்டுகிறவர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அவர்கள் ‘நாசா’ என்ன சொல்லப்போகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கதிரையின் நுனிக்கே வந்துவிட்டார்கள். ஆனாலும் திங்கட்கிழமை வரை பொறுத்திருந்துதான் ஆக வேண்டும். 


 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top