Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
கர்ப்ப காலத்தில் சிசுவை பாதிக்கும் காய்ச்சல்கள்

pregnant mother news - கர்ப்ப காலத்தில் சிசுவை பாதிக்கும் காய்ச்சல்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,534 Views
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காய்ச்சல் வருவது சாதாரமானதொன்று.இருப்பினும் கர்ப்ப காலத்தில் அதிகமானோருக்கு நோய்கள் சீக்கிரமாக தொற்றுவது அதிகம்.அதனால் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டியது அவசியம். ..காரணம் அதிகமான காய்ச்சல்கள் விதவிதமாக வருவது மட்டுமல்லாமல் கர்ப்பிணிகளுக்கு தொடருகின்றது.

சாதாரண காய்ச்சல்களால் சிசுவிற்கோ கற்பிணிகளுக்கோ மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை.அப்பிடியே ஏற்பட்டாலும் அதனை இக்கால நவீனமயப்படுத்தப்பட்ட சிகிச்சைகளால் குணப்படுத்த முடியும்.ஆனால் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் முக்கியமாக கர்ப்பிணி வயிற்றிலிருக்கும் சிசுவை பாதிக்கும் காய்ச்சல்களாக காணப்படுகின்றது.

இதனால் இந்தக்காய்ச்சல்கள் கர்ப்பிணிகளை தொற்றுவதுமட்டுமல்லாமல் சிசுக்களையும் பாதிக்கின்றது.எதிர்பார்க்கமுடியாத விளைவுகளை இவ்விரண்டு காய்ச்சல்களும் உருவாக்கிவிடும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. பன்றிக்காய்ச்சலானது A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் வருகின்றது.இக்காய்ச்சலால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் மூளைக்காய்ச்சல், ்மூச்சுக்குழாய் ஒவ்வாமை நோய்கள், சிறுநீரகச் செயலிழப்பு ,நிமோனியா, சுவாசத்தடை நோய்(ARDS), மூச்சுச்சிறுகுழாய் அழற்சி நோய் ,இதயத்தசை அழற்சி நோய் என்று பல்வகையான நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகும்.

அதுமட்டுமல்லாமல் கருச்சிதைவு, குறைப்பிரசவம், குழந்தை இறந்து பிறத்தல், குழந்தைக்கு நரம்பு மண்டலத்தில் பிறவி ஊனங்கள் உண்டாகக்கூடிய வாய்ப்புகளும் அதிகம். இநோயைத்தடுக்க Trivalent inactivated vaccine - TIV எனப்படும் தடுப்பூசி இப்பன்றிக்காய்ச்சலை தடுக்கின்றது.அத்தோடு N95 ரக முகமூடி அணிதல் ,அடிக்கடி கையை கழுவுதல்,பன்றிக்காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் நிற்காதிருத்தல் போன்றவற்றை கடைபிடித்தல் நன்று. எதுவித காரணத்தை கொண்டும் நேசல் ஸ்பிரே தடுப்பு மருந்தினை கர்ப்பிணிகள் பயன்படுத்தக் கூடாது.

டெங்கு காய்ச்சலானது டெங்கு எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் ஏற்படுகின்றது.பன்றிக்காய்ச்சல் போலவே கர்ப்பிணிகளுக்கு டெங்கு காச்சல் ஏற்பட்டால் ஆபத்துகள் மிக அதிகம். இந்தக்காய்ச்சல் ஏற்படுவதனால் எடை குறைந்த குழந்தை பிறக்கவும் குறைப்பிரசவம் ஏற்படவும் ,குழந்தை பிறகும் போதே குழந்தைக்கு டெங்கு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.

வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம். கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து வரலாம். எனவே, தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு,இவ்விளைவுகளைத் தடுப்பதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top