Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
ஹாட்ரிக் அடித்த ராகவா லாரன்ஸ்

kanchana-record - ஹாட்ரிக் அடித்த ராகவா லாரன்ஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,977 Views
ஒரு படத்தின் தொடர்ச்சியாய் அடுத்த பாகம் எடுப்பது என்பது புதிய விஷயமல்ல, புதுமையும் அல்ல…!

ஹாலிவுட்டில் ரொம்பகாலமாகவே இதை ‘பிழைப்பாகவே’ வைத்திருக்கிறார்கள். ஒரு படம் வெற்றியடைந்தால் போதும்… உடனே அந்தப் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.


சமீபத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படம் கூட 7 ஆவது பாகம்தான்.இதற்கு முன் வெளிவந்த 6 பாகங்களும் கல்லாப்பெட்டியை நிரப்பியதால் இதோ…. இப்போது 7 ஆம் பாகம்…!


இதுபோன்ற ‘தொடர்ச்சிப்படங்கள்’ தமிழிலும் வெளி வந்திருக்கின்றன.பில்லா – பில்லா-2, பீட்சா – பீட்சா-2, சிங்கம் – சிங்கம் -2 என ஆகிய படங்கள் சட்டென நினைவுக்கு வந்த சமீபகாலத்திய சீக்வெல் படங்கள்.

இவற்றில் பில்லா அளவுக்கு பில்லா -2 ஓடவில்லை.பீட்சா அளவுக்கு பீட்சா-2 ஓடவில்லை. முதல் பாகத்தைப்போலவே அடுத்தடுத்த பாகமும் வெற்றியடைவது லேசுப்பட்ட விஷயமில்லை. இந்த விஷயத்தில் சூர்யாவை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் மற்றும் சிங்கம்-2 இரண்டுமே வெற்றிப்படங்கள்.

எனவே அடுத்து சிங்கம் – 3 படத்தை எடுக்க இருக்கிறார் ஹரி. அவரை முந்திக்கொண்டவர் ராகவா லாரன்ஸ்தான்.


முனி என்ற பெயரில் பேய்ப்படம் எடுத்து ருசி கண்டவர், அடுத்து முனி – 2 படத்தை காஞ்சனா என்ற பெயரில் எடுத்தார். செம கலெக்ஷன். இப்போது முனி-3 படத்தை காஞ்சனா-2 என்ற பெயரில் இயக்கி நடித்திருக்கிறார்.


இப்படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிச்கர்ஸ் ஒரு பக்கம் பப்ளிசிட்டியில் பட்டையைக் கிளப்ப காஞ்சனா – 2 வசூலில் புதிய சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கிறது.


இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு காஞ்சனா – 2 படத்துக்கு கூட்டம் அலைமோதுகிறதாம்.

தொடர் பாகங்கள் படங்களில்  இந்திய அளவில் ஹாட்ரிக் அடித்த One and Only  இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ்!

=== CASTRO RAHUL ===

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top