Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jul
14
வியாழன் கிரகத்தில் ஏற்பட்ட புயலை ஆராய உள்ள ஆளில்லா விண்கலம்..!!

space news - வியாழன் கிரகத்தில் ஏற்பட்ட புயலை ஆராய உள்ள ஆளில்லா விண்கலம்..!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,314 Views
வியாழன் கிரகத்தின் மிகவும் அறியப்பட்ட " தீ கிரேட் ரெட் ஸ்பொட் " பெருஞ்சிவப்புப் பிரதேசம் அல்லது பெருஞ்சிவப்புப் பகுதி (Great Red Spot) என்பது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனில், தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கும் மாபெரும் புயல் மேகத்தைக் குறிக்கும். இந்த பகுதியின் அமைப்பு மற்றும் தோற்றத்தை பற்றி ஆராய்வதற்காக , அதன் மேற்பகுதியில் நாசாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று பறந்து வருகிறது.

300 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகிறது. இது வியாழனுக்கு ஒரு மிகப்பெரிய சிவப்புக்கண் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

26,000 கிமீ நீளமும் 12,000 கிமீ அகலமும் உடைய இந்த பெருஞ்சிவப்புப் பகுதியில் இரண்டு பூமிகளை வைக்கலாம்! இதன் சிவப்பு நிறம் கருங்கல் சிவப்பிலிருந்து பழுப்பு வரை மாறிக்கொண்டே இருக்கும்.

`ஜுனோ` என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா ஆய்வு விண்கலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான பெரிய புயலான அந்த பெரும் சிவப்புப் பகுதி குறித்த நெருக்கமான தரவுகளை சேகரிப்பதற்காக வியாழனுக்கு மேல் 9,000 கிலோ மீட்டர் உயரத்தில் பயணித்து வருகிறது.

வியாழக்கிரகத்தின் இந்த பெரும் சிவப்புப் புள்ளியை 1664 ஆம் ஆண்டில் Robert Hooke என்ற பிரித்தானிய அறிவியலாளர் முதன் முதலில் அவதானித்தார்.

அப்பகுதியில் மேகங்களின் கட்டமைப்பு மற்றும் அவற்றின் கீழே என்ன இருக்கிறது என்பது குறித்து சோதிக்கவும், இந்தப் புயல் வளிமண்டலத்தின் ஆழத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்புகின்றனர்.

ஜுனோ விண்கலம் வியாழன் கிரகத்தை வந்தடைந்து 12 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை விட, இந்த கிரகத்தின் காந்தப்புலம் அதிக பலத்துடன் இருப்பதையும் ஏற்கனவே இந்த விண்கலம் கண்டறிந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top