Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
பெண்ணாக மாறிக்கொண்டிருக்கும் ஆண்! தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்று தன் குடும்பத்திடம் கேட்கும் இதயத்தின் கதை.

Sooriyanfm H2H - பெண்ணாக மாறிக்கொண்டிருக்கும் ஆண்! தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்று தன் குடும்பத்திடம் கேட்கும் இதயத்தின் கதை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,657 Views
மனிதர்கள் பலவிதம் மனித உணர்வுகள் பலவிதம் இத்தகைய மனித உணர்வுகளை மதிப்பதென்பது மனிதாபிமானமுள்ள ஒவ்வருவரதும் கடமை. ஆனால் மனிதம் மரணித்துப்போன இவ்வுலகில் மனிதனை மனிதன் வார்த்தைகளால் ரணப்படுத்தி, ரசிக்கும் புதிய கலாச்சாரம் மலிந்திருப்பதை எங்களால் நித்தம் காணக்கூடியதாக இருக்கிறது.இதுவும் வார்த்தைகளால் ரணப்பட்ட ஒரு இதயத்தின் கண்ணீர் கதையே!

சாதாரணமாக ஆண், பெண் இரு பாலாருக்கும் யௌவன பருவத்திலே பருவ மாற்றம் என்பது பொதுவானதாகவே இருக்கிறது. இந்த கட்டிளமை பருவத்திலே ஆண் , பெண் இருபாலாரும் தங்கள் ஆண் மற்றும் பெண் தன்மையில் தனித்துவமமாக பூரணமடைகிறார்கள். இந்த தன்மையில் ஏற்படுகின்ற உடலியல் மாற்றங்களில் சீரான மாறுதல்கள் இல்லாத போது ஆண்களில் பெண்களுக்கான குணங்களும் பெண்களில் ஆண்களுக்கான மிஞ்சி காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இத்தகைய மாற்றங்களுக்கு உட்பட்டோரை எங்களது சமூகத்தவர்கள் நோக்கும் தன்மை மாறுபட்டதாக இருக்கின்ற காரணத்தால் அவர்கள் மனதளவில் அதிகளவிலான தாக்கங்களை சந்திக்கின்றார்கள். ஒரு சிறுவன் தனது குடும்பத்தின் கடைக்குட்டி. ஒரேயொரு ஆண் பிள்ளை. தன்னோடு பிறந்த ஐந்து சகோதரிகளோடும், தாயோடும் நெருக்கமாக இருந்து வந்த இந்த சிறுவன் வளர வளர, தன்னுடைய கட்டிளமை பருவத்திலே ஒரு ஆண்மகனுக்கான உடற்கட்டும் வளர்ச்சியும் இருந்த போதிலும் உணர்வுகளால் தன்னை ஒரு பெண்ணாக உணர்கிறான். இவனது நடை, பாவனைகளும் ஒரு பெண்ணுக்கான தன்மையுடையவையாகவே இருக்கின்றன. இதிலிருந்து மீண்டு வருவதற்காக தன்னாலான சகலவிதமான முற்சிகளையும் இவன் மேற்கொண்டு பார்த்தாலும், சிறுவயது முதல் இவன் தன சகோதரிகளோடு காட்டிய நெருக்கம் இப்போது இவன் எத்துணை முயற்சித்தாலும் இவனால் தன்னை ஒரு ஆணாக சமூகத்தில் நிரூபிக்க முடியாது போகிறது.

இந்த நிலையில் இந்த சமூகமும் அவனை சும்மா விடுவதாக இல்லை, சந்திக்கிற ஒவ்வொருவரும் இவனது நடவடிக்கைகளில் குறைக்கண்டு, குத்திக்காட்டி அவன் உணர்வுகளை சீண்டி ரணப்படுத்த தவறவில்லை. இத்தகைய செயற்பாடுகளால் தன்னுடைய ஆண் தன்மை குறித்து சந்தேகம் கொண்ட இவன் தான் திருமண வயதை எட்டியும், இன்று திருமணம் செய்துகொள்ள தயக்கம் காட்டுகிறான் . இவனது குடும்பத்தினர் இவனுக்கு ஆறுதல் தந்த போதிலும், இந்த சமூகம் குறித்து நம்பிக்கையில்லாத இந்த இளைஞன் இன்று தன் திருமண வாழ்வினையும் தவிர்த்து தனிமரமாக வாழ பணிக்கப்பட்டிருக்கிறான்.

எதற்கும் உதவிடாத இந்த சமூகத்தின் அசமந்த போக்கினால் வாழ வேண்டிய வயதில் சமூகத்தின் மீது கொண்ட அச்சம் காரணமாக தனது வாழ்வை தொலைத்து தவிக்கும் இந்த இளைஞனின் வாழ்க்கை கதையல்ல. இதயத்தோடு இதயத்தில் பரிமாறிக்கொள்ளப்பட்ட உண்மைச் சம்பவம் , சகோதரர்களே இத்தகைய சம்பவங்கள் பரிமாறிக்கொள்ளப்படுவது ரசிப்பதற்காக அல்ல சிந்திப்பதற்காக அந்த சகோதரன் கூறிய ஒருவார்த்தை "என்னை யார் எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளட்டும்,

ஆனால் நான் இந்த விடையத்தை பகிரங்கமாக சொல்லத்தூண்டியது இந்த சமூகம் என்மீது காட்டிய வெறுப்பும்,நான் பட்ட அவமானமுமே எல்லோரிடமு நான் வேண்டிக்கொள்ளும் ஒரே விடயம் தயவுசெய்து ஒருவரின் உணர்வுகளை காயப்படுத்தி அதன் சூட்டில் குளிர் காயாதீர்கள் என்பதே"

தோழர்களே இங்கே பகிரப்பட்டது போல சொல்லப்படாத சோகங்கள் இன்னும் இந்த சமூகத்தில் ஏராளம் எனவே தயவுசெய்து மற்றவர்கள் உணர்வுகளை சீண்டி அற்ப சந்தோசம் அனுபவிக்கும் துர்ப்பாக்கியம் தவிர்ப்போம். இப்படிக்கு சூரியனின் இதயத்தோடு இதயம்.உங்கள் வேதனைக்கான தீர்வுகள் எங்களிடம் பேச அழையுங்கள் 0112346744 அல்லது 0114799760 இலக்கங்களுக்கு சூரியனின் இதயத்தோடு இதயம் "எந்தன் சப்தமும் உங்கள் நிசப்தமும் சந்திக்கும் புள்ளியில் உங்கள் வேதனைகளுக்கு ஆறுதல் தேடும் முயற்சி" மீண்டும் சிந்திப்போம்.......
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top