பாகுபலி – பெயர் ஒன்று போதும் படத்தை பற்றிய அனைத்து விபரங்களும் அனைவருக்கும் தெரியும். புதிதாக என்னத்த சொல்றது..?
ஆனா, ஒரு புது மேட்டரு இருக்கு. சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் ராணா டக்குபதி இதுவரை பாகுபலி குறித்து யாரும் அறிந்திடாத தகவலை கூறியுள்ளார்.
ஆம், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியல் தெரியும்ல, அதுல ‘கல் ட்ரோகோ’னு கெத்தான ஒரு கேரக்டர் வரும். அதில் நடிச்சவர் பெயர் “ஜேசன் மொம்மோ”. அவருக்கு, முரட்டு உடம்பு. பல்வாள்தேவன் கேரக்டருக்கு அவரைத்தான் ராஜமௌலி புக் பண்ண நினைச்சாராம்.
அவருடைய கால்ஷீட் பிரச்சனை காரணமாக என்னை புக் பண்ணிஇருக்கார். இதை என்கிட்டே அவர் சொல்லும் போது எனக்கு சந்தோஷம் தாங்கல. `அவருக்கு மாற்றா நானா!’ என்ற ஆனந்தம். அதுவே எனக்கு நல்ல தொடக்கமா அமைஞ்சது.” என்று கூறியுள்ளார்.