Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Sep
12
கணவன் மனைவிக்குள் சண்டையா? அப்போ இது உங்களுக்குத்தான்

SooriyanFM - கணவன் மனைவிக்குள் சண்டையா? அப்போ இது உங்களுக்குத்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,285 Views
கணவன் மனைவி பந்தம் மிக அழகானது.அழகான ரோஜா செடியில் தான் முட்கள் அதிகம்.அதேபோல அழகான கணவன் மனைவி வாழ்க்கையில் சண்டை வருவது சகஜம்தான்.

கணவன் மனைவி இடையில் முதலில் ஈகோ எனப்படும் முக்கிய காரணிதான் சண்டைக்கு அஸ்திவாரமாக அமைகின்றது.இதுதான் குடும்ப வாழ்க்கை இடையில் முறிவதற்கும் எதுவாக அமையும் பிரதான காரணியாகவும் இருக்கின்றது.
அதனால் அப்படியான பிரச்சினைகளை வராமல் தடுக்கவும் வந்தால் தடுக்கவும் சில வழிமுறைகளை பார்க்கலாம் .

* கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் அவர்களுடைய பழக்கவழக்கங்கள் என்றுமே வித்தியாசமாக இருக்கும்.ஒரே மாதிரி அமைவது அரிது.அதேபோல விருப்பு வெறுப்புக்கள் கூட வேறுவேறாக இருக்கும்.அதனால் முதலில் இருவரும் யாரும் குறைகளில்லாமல் இருப்பதில்லை என்பதை உணர வேண்டும்.அதனை முதலில் புரிந்துகொண்டு `நிறை குறைகளோடு ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வோம்' என்ற மனநிலைக்கு வரவேண்டும்.

* கணவன் - மனைவி உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுத்தும் இன்னுமொரு காரணி இருவரின் குடும்பத்தை மாறி மாறி குறை சொல்லி பேசுவது.அத்தோடு இருவரும் தர்க்கத்தின் போது தேவையற்ற தகாத வார்த்தைகள் பிரயோகிப்பது. . இவற்றை அடியோடு தவிர்க்க வேண்டும்.

* கணவன் - மனைவி சண்டை எவ்வாறாக இருந்தாலும் சரி அதனுள் இன்னுமொருவரின் தலையீடு இல்லாமல்பார்த்துக்கொள்ள வேண்டும். சாதாரண பிரச்சினை பூகம்பமாக காரணம் மூன்றாம் நபரின் தலையீடுதான் .அந்த நபர் கணவர் அல்லது மனைவின் தாய், தந்தை, அண்ணன், அக்கா, நண்பர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். யாராக இருந்தாலும் கணவன் மனைவி பிரச்சினையை நீங்களே பேசித் தீர்வு காணுங்கள்.

* முடிந்த வரை கடந்தகாலத்தில் நடந்த கசப்பான விடயங்களை மீண்டும் நினைவு படுத்தும் வகையில் பேசிக்கொள்ள்ளாதீர்கள்.ஒருவர் கோபமாய் உள்ள போது மற்றவர் அமைதியாக இருங்கள்.அப்பிடியிருந்தால் பாதி பிரச்சனை குறைந்துவிடும்.

* முடிந்த வரை அன்பை வெளிப்படுத்துங்கள்...உங்களுக்கு பிடிக்காத செயலை செய்தால் அதனை அன்பாக சொல்லி திருத்துங்கள்..அதற்கு நல்ல வார்த்தைகள் அன்பான வார்த்தைகளை கூறி மாற்றிடுங்கள். * அதிகமாக மனம் விட்டு பேசுங்கள்.பேசும் விடயங்களை அவதானத்தில் கொள்ளுங்கள்.

* வருமானத்தில் இருவருமே இணைந்து வரவு - செலவை பராமரிக்க வேண்டும்.ஒருவரின் மீது அனைத்து சுமைகளையும் இறக்கிவைக்க கூடாது.பணவிஷயத்தில் இது எனது பணம் உனது பணம் எனும் வார்த்தையினை அடியோடு தவிர்க்க வேண்டும்.

* முடிந்தவரை இருவரும் விட்டுக்கொடுங்கள்,பிழை செய்தால் மன்னிப்புகேளுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top