கலகலப்பு திரைப்படத்தில் விமல், அஞ்சலி, சிவா, ஓவியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஓவியா படு கவர்ச்சியாக நடித்திருந்தார் என்பது எல்லோரும் அறிந்தததுதான்.
இப்படி இருக்க கலகலப்பு 2 படத்தில் நடிக்குமாறு சுந்தர் சி நம்ம ஓவியாவைக் கேட்க அவரோ மறுத்து விட்டாராம் .
காரணம் ஓவியாவை கவர்ச்சியாக நடிக்குமாறு கேட்டார்களாம். கவர்ச்சியாக நடித்தவர் ஏன் மறுக்கிறார் என்றால் ,BIG BOSS நிகழ்ச்சி மூலம் தனக்கு கிடைத்துள்ள ரசிகர் பட்டாளத்தின் பாசத்தை,மதிப்பை மனதில் வைத்து கவர்ச்சிக்கு நோ சொல்லி கலகலப்பு 2 திரைப்படத்தில் நடிக்கவே மறுத்துவிட்டாராம் ஓவியா.
ஓவியா நடிக்க மறுத்த பிறகே பிற நடிகைகளை ஒப்பந்தம் செய்தார்களாம்.கலகலப்பு 2 படத்தில் ஜீவா, ஜெய், கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.கலகலப்பு 2 படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.