Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
03
சூரியன் நேயர்கள் அவதானம்-வேண்டப்படாத விசமப் பரப்புரைகள்..!

Sooriyan-News - சூரியன் நேயர்கள் அவதானம்-வேண்டப்படாத விசமப் பரப்புரைகள்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,783 Views
சூரியன் நேயர்கள் அவதானம்-வேண்டப்படாத விசமப் பரப்புரைகள்..!

மியன்மாரில் ரோஹிங்கிய 'ஏதிலிகளுக்கு' (அகதிகளுக்கான தூய தமிழ் பதம்) எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளும், அவலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அந்த அப்பாவிப் பொதுமக்கள் மீதான கரிசனையையும்,அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் காட்டுமிராண்டித்தனமான செய்கைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.


இந்த அப்பாவி மியன்மார் 'ஏதிலிகள்' தொடர்பில் நேர்மையாக, ஒரு பொறுப்புவாய்ந்த ஊடகமாக அவர்களுக்கு எதிரான அவலங்களை எங்கள் நிகழ்ச்சிகள்,செய்திகள் மூலம் மிகவெளிப்படையாகவும் உடனுக்குடனும் வெளிக்கொண்டுவரும் நிலையில், சிலவிஷமிகள் வேண்டுமென்று சூரியன் மீதான காழ்ப்புணச்சியில் விஷம பரப்புரைகளை இனத்துவேசத்தை கிளறும் வகையில் மேற்கொண்டுவருகின்றார்கள்.

சூரியன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த செயல்பாடுகள் அமைந்திருப்பதை நாம் அவதானித்துவருகின்றோம், உங்களுக்கும் இதுபற்றி தெரிந்திருக்கும்.

இனமத பேதமற்று, நடுநிலை ஊடகமாக ,நேர்மையாக, எல்லா இனங்களும் ஒன்றாக வாழும் நாட்டில், ஒற்றுமையை கட்டியெழுப்பவதில் முதன்மை ஊடகமாக ஆசிய ஊடக வலையமைப்பும் ,சூரியன் வானொலியும் திகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் சூரியன் மீதான காழ்ப்புணர்ச்சியை கட்டவிழ்த்து விடும் நோக்கில், வேண்டப்படாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான குரோதத்தை விதைப்பதில் சில விஷமிகள் திட்டமிட்டு செயலாற்றுவது வேதனையளிக்கிறது.

கடந்த 30.09.2017 அன்று காலைநேர 6.45 செய்திகளில் மியன்மார் ரோஹிங்கிய 'ஏதிலிகள்' பற்றிய செய்தியில் நாங்கள் சரியாக குறிப்பிட்ட விடயத்தை 'ஏதிலிகளை' எதிரிகள் என்று வேண்டுமென்று திரிபுபடுத்தி சமூக ஊடகங்களில் செய்திகளை பரப்பி, அதனை ஒப்புவிப்பதற்காக சித்தரிக்கப்பட்ட ஒலிவடிவத்தையும் பதிவேற்றி, செய்திகளின் உண்மைத்தன்மைக்கு களங்கம் கற்பிக்கும் முகமாக உண்மையாக சூரியன் நேயர்களை திசைதிருப்பிவிட சில குழுவினர் முற்படுகிறார்கள். இதுதொடர்பில் சூரியன் நேயர்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

காலதிகாலமாக சூரியன் வானொலி மீது திட்டமிடப்பட்ட பொய்யான குற்றசாட்டுகளை நாங்கள் கடந்து சென்றுவிடுவதன் காரணத்தால், இவ்வாறான விஷமிகளின் செயல்கள் புதிது புதிதாக பரப்பப்படுகின்றது.

தேவையற்ற வேண்டாத பொய் பிரசாரங்கள் காரணமாக இனமுறுகலோ, சூரியன் வானொலியின் பெயருக்கோ களங்கம் ஏற்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதோடு, சூரியனை நேசிக்கும் நேயர்கள் எந்தவொரு விடயத்திலும் புண்பட்டுவிடக்கூடாது எனும் நோக்கிலும், உண்மையான செய்தியின் ஒலிவடிவத்தையும் , அந்த செய்திக் குறிப்பையும் உங்கள் முன் கொண்டுவந்து சேர்க்கின்றோம்.

சூரியனை என்றும் முதல்தரத்தில் வைத்து மகுடம் சூடி மகிழும் சூரியனின் உண்மையான உறவுகள் அத்தனைபேரும், இனமதம் கடந்து புரிந்துணர்வோடு இந்த விஷமிகளுக்கு எதிராக ஒன்றுகூடி விசமபரப்புரைகளை தவிர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகிறது.

இவ்வாறான போலி குற்றச்சாட்டுக்களையும், பொய்யான பிரசாரங்களையும் மேற்கொள்ளும் அத்தனை நபர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இவ்வாறான பிரசார யுக்திகளை மேற்கொள்ள காத்திருப்பவர்களுக்கும் சேர்த்து இந்த எச்சரிக்கையுடனான தெளிவுபடுத்தலை இங்கே தருகின்றோம்.

சூரியனை சிகரத்தில் வைத்து நேசிக்கும் நேயர்கள் அதிகமதிகம் இந்த தெளிவுபடுத்தலை பகிருங்கள்.

நன்றி.



குறித்த செய்திகளின் ஒலிவடிவத்தை இங்கே கேட்கலாம்.

https://www.facebook.com/SooriyanFMSriLanka/videos/1502855209763168/
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top