Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Oct
04
நிரூபிக்கப்பட்ட சூரியனின் நம்பகத்தன்மை - உண்மை வென்றது.

SooriyanFM News Clarifications - நிரூபிக்கப்பட்ட சூரியனின் நம்பகத்தன்மை - உண்மை வென்றது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17,654 Views
சூரியன் வானொலி மீது சேறுபூசும் முகமாக சிலரால் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்ட போலியான பிரசார யுக்திகளை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக, குறித்த செய்திகளின் உண்மையான ஒலிப்பதிவை சூரியன் வானொலி நேற்றைய நாளில் பகிரங்கப்படுத்தியது.

 


போலியாக ரோஹிங்கிய 'ஏதிலிகளை' சூரியன் செய்திகளில் எதிரிகள் என்று உச்சரித்தோம் என்று மக்களை குழப்பும் கைங்கரியங்களில் சில குழுக்கள் திட்டமிட்டு செயல்பட்டமை எமக்கு வேதனைக்குரியதாக அமைந்தது.
 
ஏராளமான சூரியன் நேயர்களின் பேரபிமானத்தை பெற்றுள்ள எமது நிறுவனத்தின் நற்பெயருக்கு ,இந்த மாதிரியான விசமப் பரப்புரைகள் நேயர்கள் மத்தியில் விஷத்தை தூவிவிடக்கூடாது என்பதில் நாம் அக்கறையோடு செயல்பட்டோம்.
 
இதன் காரணத்தினால் உரிய குற்றசாட்டு தொடர்பில் கவனத்தில் எடுத்து ,30.09.2017 அன்றைய காலைநேர செய்திகளின் ஒலிப்பதிவும் பலதடவைகள் மீளவும் கேட்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
 
குறித்த செய்தி அறிக்கையில் 5 தடவைகள் அகதிகளுக்காக  பயனப்டுத்தும் தூய தமிழ்ச்சொல்லான' ஏதிலிகள்' எனும் வார்த்தை அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கப்பட்டுள்ளது.
 
ஆயினும் குறித்த சொல்லை வேண்டுமென்றே சூரியன் செய்திகளில் 'எதிரிகள்' என்று உச்சரிக்கப்பட்டதான குற்றச்சாட்டை உரியவர்களிடம் நிரூபிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்களது ஒலிப்பதிவு  சித்தரிக்கப்பட்ட,திசைதிருப்பும் ஒலிவடிவமாக இருந்தமை   தெளிவாகியது.
 
இனமத பேதம் கடந்து,பொறுப்பு வாய்ந்த ஊடகமாக ,நம்பகத்தன்மையுடன் நடுநிலை பேணும் சூரியனின் செய்திகளுக்கு,இவர்களால் ஏற்படுத்த முனைந்த குறித்த களங்கம் இப்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
 
பல்லாயிரக்கணக்கான நேயர்களின் அபிமானத்தை கொண்டு , நடுநிலை செய்திகளை நாளுக்கு நான்கு தடவைகள் தரும் சூரியன் செய்திகளின் நம்பகத்தன்மை பாதுக்கப்பட்டுள்ளமை எங்களுக்கு திருப்தி தருகின்றது.
 
உரியவர்கள் தங்களது தவறை உணர்ந்து சமூக ஊடகங்களில் மன்னிப்பு கோரிய காரணத்தால், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை கைவிட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர எமது நிறுவனம் தயாராகியுள்ளதை நேயர்களுக்கு அறியத்தருகின்றோம்.
 
எனினும் பிரச்சனையை தோற்றுவித்தவர்கள் முன்னர் பதிவேற்றிய முகப்புத்தக பதிவுகளின் ஸ்கிரீன் ஷொட்(Screen Shot), வீடியோ ஆகியனவற்றை வேறுயாரும் இனமுறுகலைத்  தூண்டும் விதமாக பயன்படுத்தினாலும் அதற்குரிய பொறுப்பாளிகள் உரியவர்களே   என்பதையும் தெளிவுபடுத்துகின்றோம்.
 
19 ஆண்டுகளாக நடுநிலை ஊடகமாக செயல்படும் காரணத்தால் சூரியன் முதல்தரத்தில் இப்போதுவரையில் திகழ்ந்து வருகின்றது.நேயர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து ,அவர்களது குற்றச்சாட்டுக்களையும் கவனத்தில் கொண்டு, அதன் உண்மைத்தனமையும் நிரூபித்து தவறுகளும் திருத்தப்படுகின்றன.
 
தவறுகள் சுட்டி காட்டப்படுமிடத்து தாராளமாக நாங்கள் திருத்திக் கொள்ள தயாராகவே இருக்கிறோம் என்பதோடு, அதனை வேறுவழியில் கையாண்டு வேண்டுமென்றே இனக்கிலேசத்தை உருவாக்க முனைந்தால் ,அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கவும் எமது நிறுவனம் தயங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
Whatsup,Viber உட்பட்ட சமூக வலைத்தளங்களிலும் இதுதொடர்பில் வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராகவும் கண்காணிப்போடு   முறையான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
இவ்வண்ணம்
ஆசிய ஊடக வலையமைப்பு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top