விஜய்யின் மெர்சல் படம் நிச்சயம் திருவிழாவாகத்தான் இருக்கும், நானும் பார்க்க ஆவலாக இருக்கேன் என இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
சமீபத்தில் 25 மில்லியன் ஹிட்ஸ் என்ற புதிய சாதனை படைத்தது.
உலகம் முழுதும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தியேட்டரான ’தி கிராண்ட் ரெக்ஸில்’ முன்பதிவு துவங்கியுள்ளது.