நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படம் கேரளாவில் இதுவரை எந்த தமிழ்படமும் படைக்காத சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இந்த படம் கேரளாவில் மட்டும் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் படம் கேரளாவில் 20 கோடி ரூபாய் வசூல் செய்தது இதுவே முதன்முறையாகும்.
இதனால் மெர்சல் திரைப்படக் குழு மகிழ்ச்சியில் உள்ளது. இதன்மூலம் கேரளாவில் விஜயின் மார்க்கெட் மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது