Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
சிலநேரங்களில் சில மனிதர்களின் வாழ்க்கை சிதைவது தவிர்க்கமுடியாதது. தவறாக சிந்திக்கும் போது! சூரியனின் இதயத்தோடு இதயம்.

H2H - சிலநேரங்களில் சில மனிதர்களின் வாழ்க்கை சிதைவது தவிர்க்கமுடியாதது. தவறாக சிந்திக்கும் போது! சூரியனின் இதயத்தோடு இதயம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,290 Views
சிந்திக்க திரணியில்லாத, அவசியமில்லாத மனித சமூகத்தை சிந்திக்கத்தூண்டியது குடும்ப கட்டமைப்பேயாம். இதன் வளர்ச்சிப்போக்கு பல்வேறு அறிவியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களுக்கு வித்திட்டது. இன்றைய உலகின் அத்தனை மாறுதல்களுக்கும் குடும்பக்கட்டமைப்பில் ஏற்பட்ட வளர்ச்சியும்,அதன் தேவைகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் ஒரு காரணமாகும்

இந்த குடும்ப முறைமை தோன்றாது போயிருந்தால் மனிதன் இரட்டை கால் மிருகமாய் இன்னும் அலைந்து திரிந்திருப்பான். ஆனால் மனித குலத்தை வளர்த்துவிட்ட குடும்பமானது சிலருடைய அசமந்த போக்கினால் சிதைந்து போகிற போக்கினை கண்கூடாய் காண்கிறோம். ஒரு குடும்பம் சிறப்பாக வாழ்வதற்கும்,சிதைந்து போவதற்கும் கணவன் மனைவி ஆகிய இருவருக்குமே முழுமையான பங்குண்டு யாராவது ஒருவரை சார்ந்து நாங்கள் எங்கள் பிரச்சனைகளை முன்னிறுத்த முயற்சிக்கிறபோது அல்லது ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த முற்படும்போது வாழ்க்கை தன்னுடைய போக்கிலிருந்து மாறி தனக்கென தனியான பாதை அமைத்துக்கொண்டு பயணிக்கிறது.

இந்த பரிமாறலும் நெறி தவறிய செயற்பாடுகளால் வழி தவறிய வாழ்க்கை பற்றிய ஒரு பதிவாய் வருகிறது. எனது பெயர் செல்வா. மலையகத்தின் எழிலில் வளர்ந்த என் குடும்பமும் எங்கள் வழித்தோன்றல்களை போலவே வறுமையை கொண்டாட தவறவில்லை. அம்மா, அப்பா, இரண்டு சகோதரர்கள் ,ஒரு சகோதரி என அறுவரைக் கொண்டது என் குடும்பம். வறுமை காரணமாக கற்றலை கைவிட்டு சிறுவயதிலேயே தொழிலுக்காக தலை நகர் வந்த எனக்கு வாழ்க்கையில் அன்பு, கருணை, நேசம் இந்த வார்த்தைகள் புதிதானவையாகவே இருந்தது. வருடத்திற்கொருதடவை வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த நான் குடும்பம் குறித்து சிந்திப்பதே அபூர்வமான ஒன்றாகவே இருந்தது.

இந்த நிலையிலே நான் புஷ்பாவை சந்தித்தேன். நான் வேலை செய்த இடத்திற்கு அருகிலே தொழில் புரிந்து வந்த அவளை சந்தித்து காதல்வயப்பட்ட நான் வெறுமனே இருபது நாட்களில் திருமணமும் செய்துகொண்டேன். எல்லோருக்கும் போலவே எனக்கும் என் திருமண வாழ்க்கை ஆரம்பத்திலே சந்தோசமானதாகவே இருந்தது. ஆனால் அந்த சந்தோசம் நீடிக்கவில்லை அவளை திருமணம் முடித்து சிறிது நாட்களிலே அவள் பேச்சுக்கேட்டு என் குடும்பத்தை விட்டு தனிக்குடித்தனம் சென்றேன்.அங்கு சென்று சிறிது நாட்களில் எங்களுக்கிடையிலான பிரச்சனை மேலும் தீவிரமானது. தொழிலுக்காக தலைநகர் வந்த என்மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி முரண்பட ஆரம்பித்தாள்.

எங்களுக்கிடையிலான சண்டை முற்றி ஒருநாள் அவளை நான் அடித்துவிட அவள் தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். அதற்குப்பிறகு ஒரு மாதத்துக்கு நானும் அவளை தொடர்புகொள்ளவில்லை ஆனால் ஒருமாதம் கழித்து அவளை சந்திக்க முற்பட்டபோது அவளுக்கு வேறொருவருடன் திருமணமும் நடந்திருந்தது. என் அவசர செயற்பாடுகளினால் ஒருத்தி குறித்து நான் ஆராயாது எடுத்த தீர்மானங்களினால் இன்று நான் அனுபவித்துக்கொண்டிருக்கிற வேதனைகளை என்னைப்போல் யாரும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே என் அனுபவங்களை உங்களோடு பரிமாறிக்கொள்கிறேன்.

இனியொரு தடவை வாழ்க்கையில் துணையொன்றை தேர்ந்தெடுக்கும்போது உங்கள் எதிர்காலம் குறித்தும் ,உங்கள் குடும்பம் குறித்தும் சிந்தித்து தீர்மானித்திடுங்கள். என் வாழ்க்கை பாடமாகட்டும் என்று நிறைவு செய்தார் செல்வா. வாழ்க்கை வாழ்வதற்க்கே என்பதற்காக எப்படியென்றாலும் வாழலாம் என்கிற அசமந்த போக்கினால் வாழும் மனிதர்களுக்கு இந்த வாழ்க்கை ஒரு நல்ல பாடமாகும்.

உங்கள் பிரச்சனைகள் குறித்தும் மனம் திறந்து பேச அழையுங்கள் 0112346744 அல்லது 0114790760 ,0114799750 இலக்கங்களுக்கு. "சூரியனின் இதயத்தோடு இதயம் எந்தன் சப்தமும் உங்கள் நிசப்தமும் சந்திக்கும் புள்ளியில் வேதனைகளுக்கு ஆறுதல் தேடும் முயற்சி" மீண்டும் சந்திப்போம்.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top