Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Nov
14
"கத்தி" கதை - "அறம்" பட வெற்றி சொல்வது என்ன.....???

cinema - "கத்தி" கதை - "அறம்" பட வெற்றி சொல்வது என்ன.....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,512 Views
இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது "அறம்". கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா கவர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் நடித்திருக்கிறார்.

அறம் திரைப்படம் வெளியான முதல் நாள் எதிர்பார்த்த அளவு கூட்டம் திரையரங்குகளுக்கு வரவில்லை. படம் சரியாக வசூல் செய்யவில்லை. இருந்தும், படத்தை பார்த்தவர்கள் "அறம்" பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவுகளைப்போட , 2வது நாள் படத்தின் வசூல் பிக்கப்பாகி சூப்பராக சென்று கொண்டிருக்கிறது.

இது இப்படியிருக்க, படங்களில் நடிப்பதோடு மட்டும் நின்று விடும் நயன்தாரா, படத்தை விளம்பரப்படுத்தும் விளம்பர நிகழ்ச்சிகள் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார். அதற்கு காரணம் கேட்டால் 'நான் விளம்பரம் செய்தால் அந்த படம் வெற்றியடையாது என்ற செண்டிமெண்ட் இருக்கு' என்று கூறுவார். இருந்தும், தனது சென்டிமென்ட்டை மூட்டை கட்டி வைத்துவிட்டு அறம் படத்தை விளம்பரம் செய்தார் நயன்தாரா.

நயன் விளம்பரம் செய்தும் "அறம்" திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.நயன்தாரா "அறம்" திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது திரையுலகினரை வியக்க வைத்ததோடு, சந்தோஷத்திலும் ஆழ்த்தியுள்ளதாம். ஏனெனில், நடிப்பதற்கு காசு வாங்கிக்கொள்ளும் நடிகைகள் அந்தப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் சாக்குப் போக்கு சொல்லி தட்டிக்கழிப்பார்கள். அந்தப் பட்டியலில் இருந்தவரும், தான் விளம்பரம் செய்தால் படம் ஊத்திக் கொள்ளும் என்று கூறிக்கொண்டிருந்த நயன்தாராவின் மாற்றம் தயாரிப்பாளர்களுக்கு வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

இதேவேளை, பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளியான "கத்தி" திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று அப்போது சர்ச்சையை கிளப்பியவர் தான் இந்த "அறம்" திரைப்பட இயக்குனர் கோபி நயினார். அந்த நேரத்தில், கோபி நயினாரின் வார்த்தையை கண்டு கொள்ளாதவர்கள் தற்போது "அறம்" படத்தின் கதையையும் வெற்றியையும் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டை ஏற்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top