மொட்டைத் தலை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது தல மொட்டை அடித்த சுவாரஸ்ய பரபரப்பு.
இமேஜைப் பற்றி கவலைப்படாதவர் 'தல' அஜித்!
சமீப காலமாக நரைத்த தலைமுடி, தாடியுடன் படங்களில் தோன்றி நடித்தவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு சிறிதும் குறையவில்லை என்பதோடு, பெரும்பாலான ரசிகர்கள் ’தல’யின் புதிய கெட்-அப்பை வரவேற்று ரசித்தார்கள் என்பதே உண்மை!
வெளிவர இருக்கும் வீரத்திலும் தலயின் கெட் அப் அவ்வாறே.
இந்நிலையில் அஜித் இப்போது ஒரு புதிய கெட்-அப்பில், அதாவது மொட்டை தலையுடன் காட்சி தருகிறார்! இந்த மொட்டை தலை கெட்-அப் எந்தப் படத்திற்கானது என்று யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்!
அவர், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடித்து வந்த ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்ததையொட்டி அஜித்தும், இயக்குனர் சிவாவும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானுக்கு தங்களது முடியை காணிக்கையாக்கி வந்திருக்கிறார்கள்! ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர் அஜித் என்றாலும், வெளிப்படையாக இப்படி திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து மொட்டை அடித்து வந்திருப்பது இதுதான் முதல் முறை!
இதற்கு முதலேயே 'ரெட்' படத்தில் மொட்டை தோற்றத்தில் அஜித் நடித்திருந்தாலும், முழு மொட்டை அடித்திருப்பது இதுவே முதல் தடவை.
ஆக, ‘தல’ எதை செய்தாலும் அது ஒரு ஸ்டைல்தான், அது ஒரு செய்திதான்!