Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
நடந்து முடிந்த நமீதாவின் திருப்பதி திருமணம்...!!

cinema - நடந்து முடிந்த நமீதாவின் திருப்பதி திருமணம்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,480 Views
திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் நடிகை நமீதா அவரது காதலர் வீரேந்திர சவுத்ரியை இன்று திருமணம் செய்து கொண்டார். விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா.
 
 

சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா, வாய்ப்பு குறைந்த நிலையில் சமீபத்தில் பிக்போஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டார்.
 
இருப்பினும் அதன்பிறகும் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதையடுத்து, தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தார்.
 
அதனை தொடர்ந்து திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ரசிகர்கள் நமீதாவின் திருமணத்திற்காக எதிர்பார்த்திருந்தனர்.
 
இந்நிலையில் திருப்பதி இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் இன்று நமீதாவுக்கும், வீரேந்திர சவுத்திரிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தாலி கட்டும்போது பட்டு நிற சேலையில் ஜொலித்த நமீதா, பிறகு நடைபெற்ற வரவேற்பின்போது நீல நிற சேலையில், மணப்பெண் அலங்காரம் செய்திருந்தார்.
 
இன்று காலை 5.30 மணியளவில் நடைபெற்ற திருமண நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதேநேரம், சினிமா உலகில் இருந்து நடிகர் சரத்குமாரும் அவர் மனைவி நடிகை ராதிகாவும் திருமண விழாவில் பங்கேற்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top