தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் சன்னிலியோன். தற்போது தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்காக சன்னிலியோன் 150 நாட்கள் ஒப்பந்தம் கொடுத்துள்ளார். இது ஒரு சரித்திர பின்னணி கொண்ட கதை என்பதால் சன்னிலியோன் கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார்.
வி.சி.வடிவுடையான் இயக்கும் இப்படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் முதல் படமாக தயாரிக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னோட்ட வேலைகள் மற்றும்அனைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.