Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
07
திருமண பந்தத்தில் ஒளிவு மறைவு வேண்டும்!

Sooriyan Gossip - திருமண பந்தத்தில் ஒளிவு மறைவு வேண்டும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,781 Views
திருமணம் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை.அதிலும் வாழ்க்கையில் கடந்தகால ரகசியங்கள் வாழ்க்கைமுறை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மிக முக்கியமானதொன்று.திருமணத்தின் போது அல்லது திருமண காலத்திற்கு முதல் , தம்பதிகள் இருவருமே தங்களுக்குள் ஒளிவு மறைவு இருக்க கூடாதென்று தங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டவை ,நடந்தவை,ரகசியமான சில விடயங்கள் பற்றி ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்வர்.இவ்வாறான சில விடயங்கள் தான் எதிர்காலத்தில் திருமண வாழ்க்கையின் போது பூகம்பமாக வெடிக்க காரணமாக இருக்கும் சில காரணிகளாக அமைபவை.
இப்போதெல்லாம் பல விவாகரத்துகள் என் மனைவி சரியில்லை அல்லது என் கணவர் ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்தவர் அல்லது என்னை பற்றி முழுமையாக தெரிந்து என்னை தவறாக பேசுகின்றார் என்று மாறி மாறி புகார் கொடுக்குமளவிற்கு மாறியிருக்கின்றது.ஆராய்ந்து பார்த்தால் திருமணத்தின் பின்பதாக அவர்களுக்குள் எந்த விதமான பிரச்சினைகளும் இருக்காது.ஆனால்,சிறிய பிரச்சினையின் போது அவர்கள் பயன்படுத்தும் கடினமான வார்த்தை எதுவென்றால் அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி. நீங்கள் அப்பிடிப்பட்டவர் ,இப்பிடியாவாள் நீ என்று மாறி மாறி சிறிய சண்டை பெரிதாவதற்கான காரணம் கடந்த கால வாழ்க்கைமுறை பற்றி பேசியிருப்பதே மிக முக்கியமான காரணம் என்று தெரியவந்துள்ளது. பலர் கணவருக்கும் மற்றும் மனைவிக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களது அனைத்து செயற்பாடுகளையும் ரகசியங்களையும் கடந்தகால வாழ்க்கை பற்றியும் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

அதிலும் தங்கள் மேல் எதுவித தப்பில்லாததுபோலும் ,தாங்கள் தவறு செய்யாமல் இருந்தவர்களாகவும் காட்டிக்கொள்ள முயற்சி செய்வதேயாகும்.எது எவ்விதமாக இருந்தாலும் நல்லதோ கெட்டதோ முடிந்த வரை மனைவியிடமோ கணவனிடமோ உங்கள் கடந்தகால ரகசியங்களை வெளிவிடாதீர்கள்.அது உங்கள் மனதோடு போய்விடட்டும். திருமண வாழ்க்கை என்பது உங்கள் ஆயுள் எல்லை வரை வரப்போகும் ஒன்று.அதனால் வாழப்போகும் இந்த வாழ்க்கை சந்தோசமாக அமையவேண்டுமானால் உங்களை பற்றிய ரகசியங்களை நீங்களே உங்களோடு உரையாடி முடித்து முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்.திருமண வாழ்க்கையை அழகாக மாற்றி உங்கள் துணைக்கு உண்மையாக வாழ்ந்திடுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top