வெள்ளை நிற ஆடைகள் எப்போதுமே ஒருவித கம்பீரத்தையும் பெருமையையும் உண்டாக்கக்கூடியதாக இருக்கும். வெள்ளை நிற ஆடைகளை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் வெள்ளைநிற ஜீன்ஸை பெரிதாக நாம் வாங்குவதில்லை. அதற்குக் காரணம் அதன் பராமரிப்பு தான்.
சாதாரண நீளகாற்சட்டைகளை பராமரிக்க முடியாமல் தான் பெரும்பாலானோர் ஜீன்ஸ்க்கு மாறிவிட்டனர். இதில் ஜீன்ஸிலும் வெள்ளைநிற ஜீன்ஸ் என்றால் அவ்வளவு தான். ஆனால் வெள்ளைநிற ஜீன்ஸ்அணிவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் தான். அணிவதற்கு இருக்கும் துணிச்சல் அதைப் பராமரிப்பதிலும் இருக்க வேண்டும். வெள்ளை நிற ஜீன்ஸைப் பராமரிக்க சில வழிகள் உண்டு. அதைப் பின்பற்றினால் எப்போதும் புதுசுபோலவே இருக்கும் உங்கள் வெள்ளைநிற ஜீன்ஸ்.
மற்ற துணிகளை விட சலவை இயந்திரத்தில் துவைக்கும்போது கொஞ்சம் டெம்பரேச்சர் அளவை அதிகமாக வைத்துத் துவைக்க வேண்டும். டிரையரிலும் அதேபோலத்தான். வெள்ளைநிற ஜீன்ஸை உலர்த்தும்போதோ ஹெங்கரில் மாட்டும்போதோ தொங்கவிடக் கூடாது. வெள்ளைநிற ஜீன்ஸை கிடைமட்டமாகக் கீழே கிடத்தி உலர்த்த வேண்டும்.
உலர வைத்து எடுத்ததும் அயர்ன் செய்திடுங்கள். கறைகள் ஏதேனும் இருந்தால் சுருக்கங்களுக்கிடையில் அப்படியே இருக்கும். அயர்ன் செய்தால் தான் அடுத்தடுத்து துவைக்கும் பொழுது எளிமையாக இருக்கும். வெள்ளைநிற ஜீன்ஸைத் துவைக்க வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்துங்கள். வெதுவெதுப்பான நீர் அழுக்கு, கிருமி மற்றும் தூசிகளை எளிமையாகப் போக்கிவிடும்.