Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
சனிப் பெயர்ச்சி பலன்கள்-ரிஷபம்

Astrology-News - சனிப் பெயர்ச்சி பலன்கள்-ரிஷபம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,289 Views
சனிப் பெயர்ச்சி பலன்கள்-ரிஷபம்

எதிர்மறை எண்ணங்களுடன் வருபவர்களை ஆற்றுப் படுத்தி நேர்வழியில் கொண்டு செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து சின்னச் சின்ன தடைகளையும், அவ்வப்போது உடல் நலக்குறைகளையும் தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 8ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உஷாராக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதம் சில சமயங்களில் கோபத்தின் உச்சிக்கே கொண்டு போகும். மகனின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வரவேண்டிய பூர்வீகச் சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னாடி இகழ்ந்து பேசுவார்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். அறுவை சிகிச்சை உண்டு. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். சகோதரர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப்பாருங்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.சனிபகவானின் பார்வைப் பலன்கள்: 

சனிபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். சனிபகவான் 10ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். 

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.2017 முதல் 18.1.2019 மற்றும் 12.8.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பணவரவு, உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கிருத்திகை 2,3,4 மற்றும் மிருகசீரிஷம்1,2ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு இக்காலக்கட்டத்தில் புதுவேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள், பிறமொழிக்காரர்கள் உதவுவார்கள். ஆனால், ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களில்போது சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். உங்களின் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலகட்டத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். இழுபறியான வேலைகள் முடியும். 

குழந்தை பாக்யம் உண்டு. தாமதமானாலும் எதிர்பார்த்த பணம் வரும். கிருத்திகை 2, 3, 4 மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நல்லது நடக்கும். ஆனால் மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு சிறுசிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல், ஒற்றை தலை வலி, உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்துச் செல்லும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு சுகாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் வீடு, மனை சேரும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் 1, 2ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். என்றாலும் கார்த்திகை 2,3,4ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும்.

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்: 

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் தடைபட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும். அயல்நாடு மற்றும் புகழ்பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்கால கட்டத்தில் சளித்தொந்தரவு, காய்ச்சல், பல்வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 
2.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் சகோதரங்கள் மற்றும் தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துபோகும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். வியாபாரத்தில் வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். 

பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். அரசு விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். இக்காலக்கட்டத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும். 

மாணவமாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். அன்றைய பாடத்தை அன்றன்றே படிப்பது நல்லது. கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க வேண்டாம். வேதியியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! அவசர முடிவுகளை எடுத்து அவதிப்பட்டீர்களே! இனி வெளுத்ததெல்லாம் பாலென்று நினைத்து ஏமாறாதீர்கள். வாட்ஸ் அப், முகநூலில் மூழ்கிக் கிடக்காதீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. காதல் விவகாரங்களில் நிதானம் தேவை. முன் கோபத்தைத் தவிர்க்கப்பாருங்கள். புதிய வேலை கிடைக்கும். கலைத்துறையினர்களே! திரைப்பட கலைஞர்களுக்கு இந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் முன்னேற்றம் உண்டு. தொலைக்காட்சி கலைஞர்களே புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களையும், வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். இந்தச் சனிப் பெயர்ச்சி உங்களைத் தனித்து நின்றே வெற்றி பெற வைக்கும். சக்தியையும், சகிப்புத் தன்மையையும், பணப் புழக்கத்தையும் தருவதாக அமையும்.


பரிகாரம் :சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரையும் வடிவுடையம்மனையும் தரிசியுங்கள். ஏழைகளின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top