Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
சனிப் பெயர்ச்சி பலன்கள்-மிதுனம்

Astrology-news - சனிப் பெயர்ச்சி பலன்கள்-மிதுனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,164 Views
சனிப் பெயர்ச்சி பலன்கள்-மிதுனம்

இதயத்தால் பேசும் நீங்கள், எல்லா வேலைகளையும் எடுத்துக் கட்டி செய்பவர்கள். நிர்பந்தங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் அடிபணிய மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்து எல்லா வகையில் முன்னேற்றத்தையும், அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகரிக்க வைத்தாரே. நாடாளுபவர்களின் நட்பையும், வேற்று மதத்தினர்களின் அறிமுகங்களையும் கிடைக்கச்செய்தாரே. பணப்புழக்கம் சரளமாக இருந்ததால் சொத்து வாங்கினீர்களே. நல்லது கெட்டது அறிந்து செயல்பட வைத்தாரே. கோர்ட்டு, கேஸ் என்று பல வகைகளிலும் சிக்கிக்கொண்டிருந்த உங்களை மீள வைத்தாரே, நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களின் தராதரத்தை உயர்த்திக் காட்டிய சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 7ம் வீட்டில் கண்டகச் சனியாக அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும்.

குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரக்கூடும். வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்து போட்டு வைக்காதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை கவனமாக படித்துப் பார்ப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியமும் செய்ய வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவால் ஆரோக்யம் பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகனின் உயர்கல்விக்காக சிலரின் சிபாரியை நாடவேண்டியிருக்கும். உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டுமென்று வாகனத்தில் அடித்துப் பிடித்து போகாமல் முன்னதாகவே செல்லப்பாருங்கள்.சனிபகவானின் பார்வைப் பலன்கள்: 

சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு,பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. செறிமானக் கோளாறு வந்து நீங்கும். உப்பு, புளி, மிளகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். சனிபகவான் 4ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது குடிநீர், கழிவுநீர் பிரச்சனைகள் வந்துபோகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் குடும்பத்தில் சோகம் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு புது வழி பிறக்கும். முன்கோபம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். பணபலம் அதிகரிக்கும். மிருகசீரிஷம் 3,4ம் பாதம் மற்றும் புனர்பூசம் 1,2,3ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உங்களின் பூர்வபுண்ணியாதிபதியும் மற்றும் விரயாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் அதிகரிக்கும். 

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அதிகம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உறவினர் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்தி வைப்பீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் மிருகசீரிஷம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கி பேச வேண்டாம். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் தைரியஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மிருகசீரிஷம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். ஆனால் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். மனைவியின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. 

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்: 

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் ஆடம்பரச் செலவுகளை கொஞ்சம் குறைத்து சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய் வழி உறவுகளுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். 
02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆனால் மகளுக்கு வரன் பார்க்கும் போது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

வியாபாரத்தில் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத்தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். கூட்டுத் தொழில் வேண்டாமே. வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப்பாருங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். அரிசிபருப்பு மண்டி,கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். சிலருக்கு பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். அனுபவமிக்க வேலையாட்களை ஊக்கத்தொகை, சலுகைகள் என கொடுத்து தக்க வைத்துக் கொள்ளுங்கள். 
உத்யோகத்தில் முன்புபோல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். 

மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் தாமதமாகத் தான் கிடைக்கும். எதிர்பாராத இடத்திற்கு திடீரென மாற்றப்படுவீர்கள். 
கன்னிப் பெண்களே! காதல் கண்ணாம்பூச்சியெல்லாம் வேண்டாம். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைபட்ட கல்யாணம் கூடி வரும். மாணவமாணவிகளே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். மந்தம், மறதி வரும். தேர்வு நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கால் மதிப்பெண் குறையும். விளையாட்டின் போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கலைத்துறையினர்களே! சிறுசிறு வாய்ப்புகளாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். இந்தச் சனிப்பெயர்ச்சி அடங்கியிருந்த உங்களை அதிரடியாக வளர்ச்சியடையச் செய்வதுடன் அனைத்திலும் முதலிடம் பிடிக்க வைப்பதாக அமையும்.


பரிகாரம் :திருக்கோவிலூர் திரிவிக்ரமப் பெருமாளை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணியில் கலந்து கொள்ளுங்கள்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top