Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
சனிப் பெயர்ச்சி பலன்கள்-கடகம்

Astrology-News - சனிப் பெயர்ச்சி பலன்கள்-கடகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,348 Views
சனிப் பெயர்ச்சி பலன்கள்-கடகம்

மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் மனம்விட்டுப் பேசும் நீங்கள், தயாள குணம் கொண்டவர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்கும், அசாத்திய திறமை கொண்ட நீங்கள், அதிகாரப் பதவியில் அமர்ந்தாலும் அடக்கமாக இருப்பீர்கள். தவறுசெய்யும் வாய்ப்பிருந்தும் தவறாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் பல்வேறு தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுத்து வந்தாரே. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல், சாதகமாக முடியவேண்டிய சில வேலைகள் கூட போராடி முடிக்க வேண்டியதானதே, குடும்பத்திலும் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமல் தவித்தீர்களே, நீங்கள் நல்லதே சொன்னாலும் அதை சிலர் தவறாகத்தானே புரிந்து கொண்டார்கள். தொழிலில் முடக்கம், அதனை சமாளிக்க ஒரு கடன், அதனை அடைக்க மற்றொரு கடன் என்று உங்களின் கடன் பட்டியலும் நீண்டுக்கொண்டே போனதே.

இவ்வாறு பல வகைகளில் உங்களை வாட்டியெடுத்த சனிபகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் 6ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித்தருவார். எப்போது பார்த்தாலும் ஒருவித மனஇறுக்கத்துடனும், கோபத்துடன் காணப்பட்டீர்களே! இனி அவற்றிலிருந்து எல்லாம் விடுபடுவீர்கள். உடம்பு தூங்கினாலும், மூளைத் தூங்காமல் இருந்ததே! இனி முழுத்தூக்கம் வரும். நெடுநாட்களாக தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய சொந்த பந்தங்கள், நண்பர்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள்.

பல காலங்கள் இருந்த வீட்டிலிருந்து புது வீடு மாறுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு கட்டி குடிபுகுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். மகனுக்கு எங்கெல்லாமோ பெண் தேடி அலைந்தீர்களே, இனி உங்கள் அருகிலேயே உங்களுக்கு தெரிந்த சம்பந்தமே அமையும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். கையில் காலணா தங்காமல் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி செலவுகளால் சிக்கித் தவித்தீர்களே! இனி நாலுகாசு கையில் தங்கும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அவ்வப்போது அடிவயிற்றில் வலியும், அடிக்கடி இருமிக் கொண்டும் இருந்தீர்களே! இனி ஆரோக்யம் மேம்படும்.சனிபகவானின் பார்வைப் பலன்கள்: 

சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். ஆனால் கூடாப் பழக்கம் உள்ளவர்களை தவிர்க்கப்பாருங்கள். குடலுக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டாம். சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை அடிமனதில் தேக்குவது நல்லது. ஆனால் மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்கும். 

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 

19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். மேலும் புனர்பூசம் 4ம் பாதம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். ஆனால் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய வேலைகள் தடைபட்டு முடியும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் சுகலாபாதிபதியாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். 

மன உளைச்சல்,டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் புனர்பூசம் 4ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனிபகவான் உங்களின் தனஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் திருப்தி தரும். புனர்பூசம் 4ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் அமையும். ஆனால் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். 

சனிபகவானின் வக்ர சஞ்சாரம்: 

29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாவதால் உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். சனிபகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள். வீடு, மனை வாங்கும் போது தாய்ப்பத்திரத்தை சரிபார்த்துக்கொள்ளுங்கள். 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால் பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். பழைய பிரச்சனைகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். 

பல முறைக் கேட்டும் வராமலிருந்த பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். சந்தை நிலவரம் தெரியாமல் சரக்குகளை வாங்கிப் போட்டு சங்கடப்பட்டீர்களே! இனி மக்கள் ரசனைக் கேற்ப மாறுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்யோகத்தில் நிராகரிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டீர்களே! இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சிலர் எந்த வேலையிலும் நிலைக்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தீர்களே! இனி அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. வெகுநாட்களாக போராடிய சம்பள பாக்கியும் கைக்கு வரும். மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணினி துறையிலிருப்பவர்களுக்கு அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கல்யாணம் கூடிவரும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விடுபட்ட பாடத்தை எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். மாணவமாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். முதல் மதிப்பெண் பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள். ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு. கலைத்துறையினர்களே! வாய்ப்புகள் எதுவாயினும் திறம்பட செய்துமுடித்து வெற்றி காண்பீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வருமானம் உயரும். இந்தச் சனிப்பெயர்ச்சி ஒதுங்கியிருந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன், வசதி வாய்ப்புகளை தருவதாக அமையும்.


பரிகாரம் :திருநெல்வேலி நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் தரிசியுங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று உதவுங்கள்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top