தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்கநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார். செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கிறார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக இருக்கிறது.