Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
19
சூரியனின் உதவும் கரங்கள் இம்முறை ஊவா மாகாணத்தில்........

SooriyanFM's Uthavum Karangal - சூரியனின் உதவும் கரங்கள் இம்முறை ஊவா மாகாணத்தில்........Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

589 Views
சூரியனின் உதவும் கரங்கள் இம்முறை ஊவா மாகாணத்தில்........

ஆண்டு தோறும் நாட்டிலுள்ள ஏழை சிறார்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் சூரியன் இம்முறையும் தன் நேயர்களோடு இணைந்து உதவும்கரங்கள் மனிதநேய பணியினை ஊவா மாகாணத்தில், பதுளை , பண்டாரவளை பிரதேசங்களில் உள்ள சிறுவர் இல்லங்களில் முன்னெடுக்க தயாராகியுள்ளான். 2004 ஆம் ஆண்டு தொடங்கி நாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள ஏழை சிறார்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்நிகழ்ச்சித்திட்டமானது இம்முறை முதற்தடவையாக ஊவா மாகாணத்தை நோக்கி பயணிக்கிறது.
தமிழ், சிங்கள, இஸ்லாமியர்கள் என மூவின மக்களும் செறிந்து வாழுகின்ற ஊவா மாகாணத்தின் தமிழர்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் பெருந்தோட்டத்துறையினையே நம்பியுள்ளனர். மிகக்குறைந்த வருமானமட்டத்தினை கொண்ட இவர்கள் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடுமையான பிரயத்தனங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது.

இந்நிலையில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதெங்கே, இதன் காரணமாக பல சிறார்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை இடையிலேயே கைவிடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. கல்வியினை கைவிட்ட பெரும்பாலான மாணவர்கள் தலைநகரில் மிகக்குறைந்த ஊதியத்திற்கு தொழில் புரிவதையும் காணக்கூடியதாக உள்ளது. எனவே இவர்களின் துயர்களின் முழுவதும் துடைக்க முடியாது போனாலும், இவ்வாண்டு இவர்களின் கல்விக்கான செலவீனத்தின் ஒரு பகுதியினையாவது குறைநிரப்பு செய்திட முனைந்தபோது எம் நேயர்கள் செய்த பேருதவிகளின் மூலமாக எதிர்பார்த்ததை விட அதிகமான கல்வி உபகரணங்களையும், இதர பொருட்களையும் பெற்றுக்கொள்ள கூடியதாய் இருந்தது.

அப்பொருட்களை தகுதி பிரித்து பொதிசெய்து வழங்க தயாராகிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் சூரியனின் உதவும் கரங்களோடு கரம் கோர்த்த அத்தனை உறவுகளுக்கும் எங்களது கோடானகோடி நன்றிகளை பரிமாறிக்கொள்கின்றோம்.

அத்தோடு சூரியனை உளமாற நேசிக்கிற அதிகப்படியான நேயர்களை கொண்டிருக்கிற இப்பிரதேசங்களில் சூரியனின் விரிவாக்கல் மற்றும் இதர செயற்பாடுகள் குறைவாக இருப்பதாக குறைப்பட்டுக்கொள்கிற எங்களின் அன்பான நேயர்களை மகிழ்விக்க இந்தாண்டு தொடர்ச்சியாக ஊவா மாகாணத்திற்கு வருகைதந்த சூரியனின் இந்தாண்டின் இறுதி மனிதநேய பணியும் உங்களுக்கே,

எம்மோடு எந்நாளும் இணைந்திருக்கும் உங்களோடு நாம் என்றும் இணைந்திருப்போம். சூரியனின் உதவும் கரங்கள்,' உங்கள் உதவிகளால் மலரும் மழலைகளின் புன்னகையில் இறைவனை காணும் இம்முயற்சி இனி வரும் காலங்களிலும் தொடரும்................
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top