Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
Click to Whats app Button கள் விரைவில் அறிமுகம்!

Click to Whats app Button - Click to Whats app Button கள் விரைவில் அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,805 Views
மெசேஜிங் தளங்களில் ஒன்றான Whats app, ஒரு காலத்தில் விளம்பரங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி வந்தது. ஆனால் Whats app ஐ, Facebook நிறுவனம் சொந்தமாக வாங்கிய பிறகு, அந்தப் பிரபல மெசேஜிங் தளத்தின் மூலம் வருமானத்தை ஈட்டும் முயற்சிகளில் Facebook நிறுவனம் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இது குறித்து Tech Ranch வெளியிட்டுள்ள செய்தியின்படி, Facebook மற்றும் Whats app ஆகியவற்றை இணைக்கும் ஒரு இணைப்பை (Link) உருவாக்க, விளம்பரத்தாரர்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய விளம்பர பகுதியை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தயாராகி வருகிறது. இதன்படி, விளம்பரதாரர்கள் தங்களின் விளம்பரங்களில் ஒரு Button ஐ உட்படுத்த முடியும். இந்த Button ஐ கிளிக் செய்து Whats app மூலம் அழைக்கவோ அல்லது மெசேஜ் செய்யவோ வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாகும்.

இந்தாண்டின் முற்பகுதியில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சம், தற்போது Facebook நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான முறையில் இந்த அம்சத்தின் அறிமுகம் உறுதியாகி உள்ளதாக, மேற்கூறிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மேலும் கூறுகையில், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஒஸ்திரேலியா , ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா ஆகிய நாடுகளில் ஆரம்பக் கட்டமாக இந்த அம்சம் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த முதற்கட்ட அறிமுக திட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் உட்படுத்தப்படவில்லை என்றாலும், இந்தக் கண்டத்தைச் சேர்ந்த பயனர்களுக்கு, பிற்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா தவிர்த்து மற்ற பகுதிகளில் இந்த அம்சம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை Facebook தரப்பில் முதலில் கண்டறியப்பட்டு, அதன்பிறகு Facebook மற்றும் Whats appஆகிய இரண்டும் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு தீர்வைக் காணும் முயற்சியில் Facebook நிறுவனம் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் இன்றே அறிவிக்கப்பட்டு, Whats app பயன்படுத்தும் வணிகங்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய விளம்பர பகுதி Button ஐ பொறுத்த வரை, ஏற்கனவே Facebook இல் நாம் கண்டுள்ள Click to Messanger விளம்பரங்களைப் போன்று ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்போதைக்கு, Whats app இன் வழக்கமான நுகர்வோர் சேவைகளில் இந்தப் Button ஐ அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் Facebook நிறுவனத்திடம் இல்லை என்றும், தொடர்பு முகவரிக்காக பயனர்கள் கோரும் பக்கங்களில் மட்டும் இவை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. தாங்கள் Whats app இல் இருப்பதை தங்களின் Facebook பக்கத்திலேயே தெரிவிக்கும் வகையில் Facebook இல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஒரு Facebook செய்தித் தொடர்பாளர் கூறியதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்த மற்ற எந்தத் தகவல்களும் இப்போதைக்கு வெளியிடப்படவில்லை என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், தனது சமூக வலைத்தள பயன்பாட்டு எல்லைக்குள் Whats app ஐ கொண்டு வரும் திட்டங்கள், Facebook நிறுவனத்திடம் இருக்கலாம் என்ற தகவல் வெளியானது.

இதற்காக அந்நிறுவனத்தின் மூலம் இந்த சமூக வலைத் தளத்திற்குள் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டு, பயனர்களால் Facebook மற்றும் Whats app ஐ உடனடியாக இணைக்கும் வசதி உருவாக்கப்படலாம் என்று அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top