Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
ஒரு மாதத்துக்கே 18 லட்சம் கோடியா....?

x mas - ஒரு மாதத்துக்கே 18 லட்சம் கோடியா....?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

779 Views
உலகிலேயே அதிகமானோரினால் கொண்டாடப்படுகின்ற முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நத்தார் பண்டிகை. நத்தார் பண்டிகையின் போது மின்விளக்குகளைக் கொண்டு நத்தார் மரங்களை அலங்கரிப்பது உண்டு. இப்படி நத்தார் தினத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடிய ஒருவரின் வீட்டிற்கு உலகிலேயே மிகவும் அதிக அளவில் மின்சார கட்டணம் வந்திருக்கிறது. அதன்படி வாஷிங்டனை சேர்ந்த ஒருவருக்கு மொத்தம் 18 லட்சம் கோடி கட்ட வேண்டும் என்று மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதனால் அந்த குடும்பத்தின் தலைவிக்கு உடலில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அந்த கட்டண தொகையை பார்த்தவுடன் அவரது இதயம் வலித்து உள்ளது. இந்த பிரச்சனை குறித்து அந்த பெண்ணின் மகன் அங்கு இருக்கும் பத்திரிக்கைகளில் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் அந்த மின்சார கட்டண பில்லையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது. அனைவரும் நத்தார் தினத்தை வெகு விமர்சையாகவே கொண்டாடியிருந்தார்கள் என்றே சொல்லலாம். எல்லாம் ஒருபக்கம் இருக்க 'மேரி ஹோரோமான்ஸ்கி' என்ற பெண்ணின் வீட்டிற்கு மட்டும் 18 லட்சம் கோடி மின்சார கட்டணம் வந்துள்ளது. ஏற்கனவே அந்த பெண்ணுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் மீண்டும் பிரச்சனை வந்து விடுமோ என்று அவர் பயந்துள்ளார். மேலும் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அங்கு இருந்த கிறிஸ்மஸ் மரத்தால் தான் இவ்வளவு மின் தொகை வந்திருக்கும் என்று கூறியுள்ளனர். இந்த பில்லை உடனடியாக போட்டோ எடுத்து அந்த பெண், கல்லூரில் படிக்கும் தன் மகனுக்கு அனுப்பி இருக்கிறார். அவர் இந்த பில்லை அப்படியே மின்சார துறைக்கு அனுப்பி புகார் அளித்துள்ளார். அதன்பின்பே பில் தவறாக பிரிண்ட் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே மின்சார கட்டணம் வந்துள்ளது. ஆனால் தங்களை பயமுறுத்திய மின்சார துறையை ஒரு கை பார்க்க முடிவு செய்து இருக்கிறார் மேரியின் மகன். இந்த பில்லின் புகை படத்தை அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பி உள்ளார். அதனுடன் அந்த நிகழ்வு குறித்து நகைச்சுவையாகவும் எழுதியுள்ளார். தற்போது இந்த செய்தி அமெரிக்கா முழுக்க வைரல் ஆகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top