Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
29
இரும்புச்சத்து நிறைந்த முருங்கை மரமும் அதன் மருத்துவ குணமும்!

Sooriyan Gossip - இரும்புச்சத்து நிறைந்த முருங்கை மரமும் அதன் மருத்துவ குணமும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,073 Views
வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது.
முருங்கையின் இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும், மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். இலையின் சாறு விக்கல் போக்கும், அதிக அளவில் வாந்தி தூண்டும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.

தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும். உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும்.

இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
* நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.
* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
* முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். * முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். * முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* முருங்கை பிஞ்சில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
* ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது.
* முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.
* வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும். * சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.

தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது. ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது.

இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரையை சாப்பிட்டால் வயிறு வலிக்கும், பேதியாகிறது என்று சொல்லக்கூடிய சில பக்கவிளைவுகள் உண்டு. அதற்கான காரணம் என்னவென்றால் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தும், அளவுக்கு அதிகமான கால்சியமும் முருங்கைக்கீரையில் இருப்பதால் ஒரு சிலருக்கு இந்த முருங்கைக்கீரை செரியாமை என்பதைக் கொண்டுவந்து கழிச்சலை உண்டாக்கும்.

ஒரு சிலருக்கு வாந்தி வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. எனவேதான் எந்தக் கீரையாக இருந்தாலும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், எல்லா கீரைகளையுமே பார்க்கும் பொழுது மந்தமான தன்மை உடையது, எளிதில் கீரை செரிமானமாகாது, ஆனால் மிக எளிய உணவு. ஒரு நபர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும்.

காலையில் முருங்கைக்கீரையை மட்டுமே கடைந்து சாப்பிடுவது அல்லது வெறும் முருங்கைக்கீரையை சூப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு வேறு ஏதாவது பப்பாளிப்பழம் அல்லது கொள்ளை அவித்து சிறிதளவு அதாவது காலையில் முருங்கைக்கீரை சூப்பும் கொள்ளு சிறிதளவும் அல்லது முருங்கைக்கீரை சூப்பும் பப்பாளியும் மாலையில் மறுபடியும் முருங்கைக்கீரையை சூப் இரவு நேரத்தில் ஒரு சிற்றுண்டி என்று இந்த மாதிரி ஒரு உணவுப்பழக்கத்தைத், தொடர்ந்து ஒரு மாதம் இரண்டு மாதம் பழக்கப்படுத்துகிற பொழுது கண்டிப்பாக உடல் எடை குறையும். ஏனென்றால் குறைவான கலோரி உள்ளது. L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. அதே மாதிரி தொடர்ந்து பயணப்படக்கூடியவர்கள், இருசக்கர வாகனங்களில் போய் வரக்கூடியவர்களுக்கும் L4, L5 தேய்ந்து போகிறது. அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ஒரு அரைமணிநேரத்தில் உட்கார்ந்த நிலையில் இயலாத ஒரு சூழல் உண்டாகும். அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது, L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய disc prolapse ஆவது இவையனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து எதுவென்றால் முருங்கைக்கீரைதான் என்று சொல்லவேண்டும்.

முருங்கைக்கீரைக் கஞ்சியை செய்துவைத்துக்கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும். இவ்வாறு சாப்பிட்டுக்கொண்டே வந்தால் உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும். கரு உண்டாகி அறுவைச்சிகிச்சை அடிப்படையில் குழந்தை பெற்ற நிறைய பெண்களுக்கு, ஒரு பத்து நிமிடம் கூட உட்காரமுடியாமல் இருந்த பெண்களுக்கு வெறும் முருங்கைக்கீரை கஞ்சியவே இரண்டு மாதம், மூன்று மாதம் கொடுக்கலாம் .

ஆக முருங்கைக்கீரையை விடாமல் தொடர்ந்து சாப்பிடக்கூடிய ஒரு பழக்கவழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டீர்கள் என்றால் மிகவும் அற்புதமாக இருக்கும். இதற்கு மட்டும்தான் இந்த முருங்கைக்கீரையா என்றால், ஆண்மையைக்கூட அதிக அளவு வலுப்படுத்தக்கூடிய தன்மை உண்டு. முருங்கை விதை, சந்ததி இல்லாத அனைவருக்குமே சந்ததி தரக்கூடிய அற்புதமான விதை. கீரைகளின் ராணியாம் முருங்கையைத் தொடர்ந்து நாடுங்கள், உங்களுக்கு தலை முதல் பாதம் வரை எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரிசெய்யக்கூடிய ஒரே ஒரு மூலிகை முருங்கை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top