Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
29
கண்கள் இல்லாத மீன் !!

Sooriyan Gossip - கண்கள் இல்லாத மீன் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,252 Views
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள குகையில் கண்கள் இல்லாத மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.வடகிழக்கு மாநிலமான மேகாலயா, இயற்கை எழில் மிக்கது. இங்குள்ள கிழக்கு ஜெய்ன்ஷியா மலை மாவட்டத்தில் பெரிய குகை ஒன்று உள்ளது. லர்க்கெட் என்ற கிராமத்துக்கு அருகே, கடல் மட்டத்தில் இருந்து 880 மீட்டர் உயரத்தில் இந்த குகை அமைந்துள்ளது. இது, 7 கிமீ நீளமும் கொண்டது.இருட்டு சூழ்ந்த இந்த குகைக்குள் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் உள்ள சிறு சிறு குட்டைகளில் பாம்பு, தவளை, நண்டுகள் போன்றவை வாழ்கின்றன. அதோடு, சுருட்டை, சிலந்தி, கரப்பான்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களும் குகையில் காணப்படுகின்றன.
இந்த குகையில் உள்ள குட்டைகளில் கண்கள் இல்லாத குருட்டு மீன்கள் இருப்பதை கவுகாத்தி பல்கலைக் கழகம் மற்றும் வடகிழக்கு மலை பல்கலைக கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டாக கண்டுபிடித்துள்ளனர். கவுகாத்தி பல்கலையை சேர்ந்த விஞ்ஞானி குலுர் முக்ஹிம் இது பற்றி கூறியதாவது:

ஆரம்பத்தில் இந்த மீன்களுக்கு கண்கள் இருந்துள்ளது. இருட்டு குகைக்குள் தொடர்ந்து வாழ்ந்ததால், இந்த மீன்கள் பரிணாம வளர்ச்சியில் உருவ மாற்றம் அடைந்து கண்களை இழந்துள்ளன. கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் இப்போது அவற்றுக்கு கரும்புள்ளிகள் இருக்கின்றன. இது, அவற்றுக்கு ஆரம்பக் காலத்தில் கண்கள் இருந்ததற்கான அடையாளமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

குகையின் நுழைவு வாயிலில் இருந்து 1,600 அடி தூரத்தில் உள்ள குட்டைகளில் மூன்று முதல் 7 அடி ஆழத்தில் உள்ள தண்ணீரில் இந்த மீன்கள் கண்டறியப்பட்டன. இந்த குகையில் கண்கள் இல்லாத குருட்டு மீன்கள் இருப்பது பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த தகவல் உண்மைதானா என சரிபார்த்து, இப்போதுதான் அதை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த மீன்கள் வாழும் குட்டைகளின் தரையில் அதிகளவில் சேறும், கூழாங்கற்களும் உள்ளன.

பல ஆண்டுகளாக இருட்டிலேயே வாழ்ந்து வருவதால், இந்த மீன்கள் நிறத்தையும் இழந்துள்ளன. இந்த மீன்களுக்கு ‘சிஸ்ச்சுரா லர்க்கெட்னிசிஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. லர்க்கெட் கிராமத்துக்கு அருகேயுள்ள குகையில் இந்த மீன்கள் வாழ்வதால், கிராமத்தின் பெயரும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு குகையிலும் இதேபோன்ற கண்கள் இல்லாத மீன்கள் உள்ளன. அவற்றுக்கு ‘சிசிஸ்ச்சுரா பபுலிபெரா’ என்று பெயர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top