Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
04
கேரளத்து நயனம் கிறுக்கியது என்ன.....??? - கொண்டாடுகின்றனர் விசிறிகள்....!!

cinema - கேரளத்து நயனம் கிறுக்கியது என்ன.....??? - கொண்டாடுகின்றனர் விசிறிகள்....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,080 Views
தென்னிந்திய திரையுலகில் அழகுப் பதுமைகளாகவும், கவர்ச்சிப் புயலாகவும் வந்து தலை காட்டிவிட்டு, கொஞ்ச நாட்களில் காணாமல் போய்விடுவது தான் நடிகைகளை பொறுத்தவரையிலான பொதுவான நடைமுறை.
 
 

ஆணாதிக்கம் நிறைந்தது என்று சொல்லப்படுகின்ற  திரையுலகில், ஒரு நடிகையாக 14 ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்பதென்பது எந்த அளவிற்கு கடினம் என்பது அந்தத் துறை சார்ந்தவர்களுக்குத் தான் தெரியும். வந்த தடைகள் அனைத்தையும் தாண்டி, தமிழ்த் திரையுலகில் இன்றும் நிலைத்து நின்று தனக்கென தனி முத்திரை பதித்து நடிப்பில் அசத்தி வருகின்றார் நடிகை நயன்தாரா.
 
இந்த நிலையில், திரைத்துறைக்கு வந்து 14 ஆண்டுகளை நிறைவு செய்த சந்தோசத்துடன், பிறந்திருக்கும் புது வருடத்தில், தன்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு தன் கைப்பட ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை வரைந்து, புதுவருட  வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.
 
நயன்தாரா தான் எழுதிய அந்த கடிதத்தில் "எனது இந்த வாழ்க்கையும், நான் திரையுலகில் இவ்வளவு உயரம் தொடவும்   ரசிகர்களான நீங்கள் தந்த அன்பும், ஆதரவுதான் காரணம். உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. உங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நிபந்தனையற்ற, உண்மையான உங்களின் அன்பு மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த அன்புதான் என் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் அழகாக்கி உள்ளது.
 
நீங்கள் காட்டும் அன்பால் கடுமையான உழைப்பின் மீதான நம்பிக்கையை உணரவைத்திருக்கிறது. எதைப்பற்றியும் எண்ணாமல் தொடர்ச்சியாக கடுமையான உழைப்பு தரவேண்டும். மற்றவற்றை இறைவனிடம் விட்டுவிட வேண்டும் என்ற தெளிவை தந்திருக்கிறீர்கள்.
 
உங்களின் அன்புக்கு கைமாறாக கடுமையான உழைப்பை என்னால் தரமுடியும். பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் மட்டுமல்லாமல் ‘அறம்’ போன்ற பொறுப்பான படங்களையும் தருவதற்கான பொறுப்புணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக அனைத்து தரப்பினருக்கும் 
இந்த வேளையில் நன்றி சொல்கிறேன் . இந்த ஆண்டு நம் அனைவருக்கும் அற்புதமாகவும், அன்பாகவும், நேர்மறையானதாகவும் அமையும். . உங்களால்தான் நான். உங்கள் இதயத்தில் எனக்கென்று ஒரு சிறிய இடத்தை தந்ததற்கு மீண்டும் நன்றி. உங்கள் அனைவரையும் நான் நேசிக்கின்றேன்..." என மனம் நெகிழ்ந்திருக்கிறார் கேரளத்து நயனம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top