Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
09
அரசியலில் ரஜினியும் - அலைய வைக்கும் பாபா முத்திரையும்....!!

Indian news - அரசியலில் ரஜினியும் - அலைய வைக்கும் பாபா முத்திரையும்....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

682 Views
'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொன்னதும் தான் சொன்னார். அன்று தொடங்கிய அதிர்வலைகள் இன்று வரை நின்றுபோவதாகத் தோன்றவில்லை. திரைத்துறையிலிருந்து அரசியல் களம் வரை அனைவரையும் தன பக்கம் திரும்ப வைத்திருக்கின்றது ரஜினியின் அரசியல் பிரவேசம்.
 

இந்த நிலையில், அரசியல்வாதிகளும் திரையுலகத்தினரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை முன்வைக்காது தொடங்கியிருக்கின்ற நிலையில், ரஜினியின் தனிக்கட்சிக்கான சின்னம் தொடர்பில் பல்வேறு ஊகங்களும், கற்பனைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

2002- ம் ஆண்டு வெளியான "பாபா" திரைப்படத்தில் பாபா முத்திரையை (அபான முத்திரை) ரஜினி அறிமுகப்படுத்தினார். அதன் பின், தான் தோன்றும் மேடைகளில் அந்த முத்திரையை காண்பித்து, குறித்த சின்னத்துக்கான செல்வாக்கை ரஜினி பெருக்கிக் கொண்டார். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் அந்த முத்திரை பிரபலம் ஆனது.

இது இவ்வாறிருக்க, எல்லோராலும் பெருமளவில் இது தான் ரஜினியின் கட்சி சின்னம் எனக் கருதப்படுவதும், "பாபா" திரைப்படத்தில் ரஜினி அடிக்கடி தன் கை விரல்களில் பிடித்துக் காட்டும் 'பாபா முத்திரை' தான் ஆன்மீக அரசியலுக்கான கட்சிச் சின்னம் என அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு முடிவுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர். ரஜினி, பொது வெளியில் தனது  ரசிகர்களுக்கு காட்டுகின்ற  பாபா முத்திரை, தமது நிறுவனத்தின் சின்னம் (லோகோ) என மும்பையை சேர்ந்த கைத்தொலைபேசி செயலி (Mobile App)  நிறுவனம் ஒன்றே பரபரப்பை கிளப்பியிருக்கின்றது.

ரஜினியின் கட்சிச் சின்னம் தொடர்பில் ஏற்பட்ட இந்தக் குழப்பம் பற்றி, மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும்  ‘வொக்ஸ் வெப்’ எனும் கைத்தொலைபேசிச் செயலி  நிறுவனர் யாஷ் மிஸ்ரா கூறுகையில், "ரஜினிகாந்த் காண்பிக்கும் முத்திரை சின்னமும், எங்கள் நிறுவனத்தின் அடையாளச் சின்னமும் (லோகோ) ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக, ரஜினியின் அரசியல் வருகையை ஊக்குவிக்கின்றீர்களா? என பலரும் எங்களை கேள்வி கேட்டு குடைகிறார்கள். இது பற்றி ரஜினிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். சின்னத்தில் மாற்றங்கள் செய்து கொள்ள அவரை அறிவுறுத்துவோம். மற்றபடி ரஜினிக்கோ அல்லது அரசியல் கொள்கைகளுக்கோ, எமக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என தெரிவித்தார். 

இது இப்படியிருக்க, 'பாபா முத்திரை' தொடர்பான குழப்பத்திற்கு ரஜினியின் விளக்கம் என்னவாக இருக்கும் என்பதை அறிய எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு, எவ்வித ஆக்கபூர்வமான பயனும் கிடைக்கவில்லை.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top