Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
குளியலில் கிறங்கடிக்கும் ஜனனி ஐயர் - எதிர்பார்ப்பில் "விதி மதி உல்டா"

cinema - குளியலில் கிறங்கடிக்கும் ஜனனி ஐயர் - எதிர்பார்ப்பில் "விதி மதி உல்டா"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,686 Views
விளம்பரப்படங்களில்  நடிக்க ஆரம்பித்து "அவன் இவன்" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஜனனி ஐயர். 150 ற்கும் மேற்பட்ட விளம்படப் படங்களில் நடித்திருப்பதோடு, தமிழில் "தெகிடி", "அதேகண்கள்", "முப்பரிமாணம்", "பலூன்",   "விதி மதி உல்டா" என தொடக்கின்றது திரைப்படத் துறைக்கான அவரது பங்களிப்பு.
 
 

ஜனனி ஐயர் தற்போது "விதி மதி உல்டா" படத்தின் நடித்து முடித்திருக்கும் நிலையில், படத்தை விளம்பரப்படுத்த படம் பற்றிய பல விதமான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அத்துடன், படப்பிடிப்பின்போது நடந்த பல சுவாரஸ்யமான செய்திகளும் படக்குழுவினரால் வெளியிடப்படுகின்றன. 
 
 "விதி மதி உல்டா" படத்தில் தான், ஜனனி ஐயர் முதன்முதலாக தூக்கலான கவுண் அணிந்து மிகவும் கவர்ச்சியாக  நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், குளியல் காட்சி ஒன்றிலும் சிறப்பாக நடித்து கொடுத்திருக்கின்றாராம் ஜனனி.
 
இந்தப் படத்தை இயக்குனர் விஜய் பாலாஜி இயக்க, ரமீஷ் ராஜா ஹீரோவாக நடித்திருப்பதுடன் படத்தையும் தயாரித்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் இயக்குனர் கூறுகையில் "இந்தப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் திடீரென பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. இருந்தும், அந்தநேரத்தில் புதுவை கடற்கரை பகுதியில் பாடல் காட்சி ஒன்றை கஷ்டப்பட்டு படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது கடலில் நீந்த வந்த 3 இளைஞர்கள் இறந்து விட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. படக்குழு தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் உருவானது. படப்பிடிப்பை ரத்து செய்தால் மீண்டும் ஜனனி ஐயரின் காட்சிகளை படமாக்குவதற்கான நாட்கள் கிடைப்பதற்கு நீண்ட காலம் ஆகிவிடும். இதனால் நான் கவலை அடைந்தேன். எனது நிலையை புரிந்து கொண்ட ஜனனி ஐயர், ‘என்ன நடந்தாலும் பரவாயில்லை படப்பிடிப்பை நடத்தி முடியுங்கள்’ என்று தைரியம் சொன்னதுடன் அவரே அக்காட்சியில் தூக்கலான கவர்ச்சி ஆடை அணிந்து நடித்துக் கொடுத்தார். இது எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது" என கூறினார்.
 
இதேவேளை, விரைவில் திரைக்கு வரவிருக்கும் "விதி மதி உல்டா" திரைப்படத்தில் ஜனனி ஐயர் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களால் அதிகம் பேசப்படும் என்று படக்குழுவினரும் சிலாகிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top