Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
15
கதையும் குழந்தைகளும் .....!!

telling stories - கதையும் குழந்தைகளும் .....!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

680 Views
கதைகளைக் கேட்பது குழந்தைகளின் உரிமை. அதற்குத் தகுந்த நேரம் ஒதுக்கி, அவர்களுக்குக் கதைகள் சொல்வது, பெற்றோர்களாகிய நம் கடமை. கதை கேட்கும் குழந்தைகளின் கற்பனை சக்தியானது அதிகரிக்கும் என்பது உண்மையான ஒரு கருத்தாகும்.





 

அத்தோடு கவனிக்கும் திறனும் வளர்கிறது. அதுமட்டுமல்லாமல் பெற்றோரையும் குழந்தைகளையும் நெருக்கமாக்குகின்றன. அதிகமாக ஓடி ஆடி விளையாடித் திரியும் பிள்ளைகள் ஒரு இடத்தில் அமர்ந்து கதை கேட்கும் போது கூர்ந்து கவனிப்பதற்கும், அமைதியாக மனதை கதையில் ஈடுபடுத்தவும் பழகுகின்றனர்.

அன்பு, கருணை, ஒத்திசைவு, அழகு, அமைதி போன்றவற்றை சிறப்பாக அறிந்து கொள்ள உதவும் கருவியாகவும் கற்றுக்கொள்வதற்கு அடித்தளமாகவும் இருக்கிறது.அதுமட்டுமா புத்தகத்தில் பார்க்கும் படங்களையும், நாம் சொல்லும் கதையையும் தொடர்புப்படுத்த, குழந்தைகள் கற்கின்றனர்.

அத்தோடு, அவர்களை மகிழ்விக்கவும், ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கவும் உதவுகிறது.மிகப் பெரிய நன்மையாக காலப்போக்கில் வாசிப்புப் பழக்கத்திற்கும் அடிப்படைத் தளம் அமைக்கிறது. எனவே ,,  கதைகள் சொல்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்.  கதைகளை சொல்லி முடிக்காமல் மிகுதியை நாளைச் சொல்கிறேன் என்று கூறி கதையின் மேலுள்ள ஆவலைத் தூண்டுங்கள்.  கதைகளில் வரும் உணர்வுகளை ,உங்கள் குரலும், முக பாவனைகளுமே, குழந்தைகளை, கதை உலகத்திற்கு அழைத்துச் சென்று கதையை உயிர்ப்பிக்கின்றன.


எனவே அதைக் கடைப்பிடியுங்கள்.  கதாபாத்திரத்துக்கு பொருந்து உடைகள் இருந்தால் அணிந்து கொள்ளலாம்.  கதையில் வரும் செயல்களை, முடிந்தவரையில் நடித்துக் காட்டுங்கள்.  உண்மையான கதைகள் , அல்லது உண்மையை உணர்த்துகின்ற கதைகளை அதிகமாச் சொல்லுங்கள். .  கூறிய கதைகளையே மீண்டும் கூறலாம். தவறில்லை; மேலும், “எந்தக் கதை சொல்ல?” என்று குழந்தைகளையே கூட கேட்கலாம்.  கதையைக் கூறி முடித்த பின், கதையின் படிப்பினையை அவர்களாகவே புரிந்து கொள்வதற்கு களமமையுங்கள் . நிச்சயம் நம் குழந்தைகள், கதை சொல்வதன் ஊடாக, பல பயன்களை பெறுவார் என்பது உறுதி.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top