Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
என்ன இவர்களிடம் பாஸ்போர்ட் இல்லையா !!

Sooriyan Gossip - என்ன இவர்களிடம் பாஸ்போர்ட் இல்லையா !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,795 Views
பத்து சதவிகித அமெரிக்கர்களிடம் மட்டும்தான் பாஸ்போர்ட் இருக்கிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது. இணையத்திலும் இது தொடர்பான தகவல்களை நீங்கள் அதிகம் பார்க்கலாம். இந்த தகவல் 1994-ல் உண்மையாக இருந்தாலும், இப்போது 40 சதவிகித அமெரிக்கர்களிடம் பாஸ்போர்ட் உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி கண்டும் வருகிறது. பலர் இப்போது பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். பாஸ்போர்ட் எடுப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு மூன்று காரணங்கள் உள்ளது
முதல் காரணம், 9/11 இரட்டை கோபுர தாக்குதல். இந்த தாக்குதலுக்குப் பின் சட்டங்கள் நிறைய மாறின. இந்த தாக்குதலுக்கு முன்பு, அமெரிக்கர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் கனடா, மெக்ஸிகோ, மற்றும் தங்களது பிற அண்டை நாடுகளுக்கு செல்ல முடியும். ஆனால், அதன்பின் சட்டங்கள் இறுக்கமாகின. இந்த நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் தேவைப்பட்டது. இதற்குப் பின், மூன்று ஆண்டுகளில், பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 20 மில்லியன் என்ற அளவில் உயர்ந்தது.

இரண்டாவது காரணம், வளரும் பொருளாதாரமும், குறைந்து வரும் எண்ணெய் விலையும்தான். இதன் காரணமாக விமான பயணச்சீட்டு கட்டணம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்து இருக்கிறது மூன்றாவது காரணம், புது அனுபவ தேடலுக்கான ஊந்துதல். "நவயுக இளைஞர்கள் தங்களது பணத்தை பொருட்கள் வாங்குவதற்கு செலவிடுவதைவிட, புதிய அனுபவ தேடலுக்காகதான் செலவிடுகிறார்கள்.

மகிழுந்து வாங்குவதில் அவர்கள் மகிழ்ச்சி காண்பதைவிட, புதிய நினைவுகளை உண்டாக்குவதில்தான் மகிழ்ச்சிகாண்கிறார்கள். அதற்காகதான் செலவிடவும் விரும்புகிறார்கள்." அமெரிக்காவில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், 42 சதவிகிதம் என்பது மிகவும் குறைவுதான். பிரிட்டனில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்பிரிட்டனில் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குப் படி 76 சதவிகித இங்கிலாந்து மக்களிடம் பாஸ்போர்ட் உள்ளது. ஆனால் அதே நேரம், பாஸ்போர்ட் இல்லாத அமெரிக்கர், பாஸ்போர்ட் இல்லாத பிரித்தானியரைவிட அதிக தூரம் பயணிக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top