Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
18
உங்கள் வாக்குரிமையை இழக்காதிருங்கள் - உள்ளூராட்சித் தேர்தல்.

local government election - உங்கள் வாக்குரிமையை இழக்காதிருங்கள் - உள்ளூராட்சித் தேர்தல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

990 Views
எம் நாட்டின் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருப்பதும், அனைவரதும் அண்மைக்கால பேசுபொருளாகவும், ஆட்சி மாற்றம் தொடங்கி கட்சித் தாவல்கள் வரைக்கும் கதை கதையாய் ஊடகங்களை பேச வைத்துக் கொண்டிருக்கின்றது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்.
 
 

நீண்ட நாட்களாக இழுபட்டுக்கொண்டிருந்த இந்தத் தேர்தல் திருவிழாவிற்கான திகதி ஒருவாறு தீர்மானத்துக்கு வந்து, தற்போது வாக்கு அட்டைகளை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தொட்டு நிற்கின்றது.
 
சில இடங்களில் சேர்ந்தும், பல இடங்களில் பிரிந்தும் கட்சிகளுடன் தாம் சார்ந்த பிரதேசங்களில் தமது மக்கள் பலத்தை காட்டும் பலப்பரீட்சையில் இறங்கியிருக்கிறார்கள் தேர்தல் வேட்பாளர்கள். மக்களும், தமது எதிர்கால வாழ்க்கைக்கான தேவைகளையும், தமது பிரதேசத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு சேவை செய்பவர்களை தேர்ந்தெடுக்கவும், முன்னைய தேர்தல்களின் மூலம் தேர்வு செய்யப்பட்ட தம் பிரதிநிதிகள் இழைத்த தவறுகளுக்கான படிப்பினையை வழங்கவும் தயாராகின்றனர்.
 
இந்த நிலையில், தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் உரிமையை கொடுக்கும் வாக்கு அட்டைகள், வாக்களிக்க தகுதி பெற்ற 1 கோடி 53 லட்சம் (15.3 மில்லியன்) வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைப்பதற்காக இன்றைய தினம் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன.
 
இதேவேளை, வாக்கு அட்டைகளைப் பகிர்ந்தளிக்கும் விசேட தினம் ஒன்றும் தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் . எம். மொஹமட் இது குறித்து கூறுகையில், எதிர்வரும்  28ஆம் திகதியை குறித்த விசேட தினமாக  அறிவித்துள்ளதாகவும், வாக்கு அட்டைகள் பகிந்தளிக்கும் இந்த நடவடிக்கை பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரையில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
 
அத்துடன், இந்த முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுடம் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு தேர்தல் குறித்து அறிவுறுத்தும் வேலைத்திட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுக்களுக்காக இவ்வாறான வேலைத்திட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
இதன்படி, இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆரம்பமாகவுள்ள இந்த வேலைத்திட்டத்தில் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அதேபோன்று, குறித்த வேலைத்திட்டத்தை நாளை கண்டி மாவட்ட செயலகத்திலும், நாளை மறுதினம் வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலும் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. 
 
இது இவ்வாறிருக்க, பெப்ரவரி மாதம் 3ம் திகதிக்கு பின்னரும் வாக்கு அட்டைகள் கைகளில் கிடைக்காத நிலையில் வாக்காளர்கள் இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக உங்கள் அருகிலுள்ள தேர்தல்கள் தொடர்பான காரியாலயத்தை தொடர்பு கொண்டு உங்கள் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.   
 
 
 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top