இங்குள்ள வானிலை மையத்தில் வெப்பநிலை மைனஸ் 59 செல்சியஸாக பதிவாகியுள்ளது. ஆனால் இங்கு மைனஸ் 67 செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு இந்த கிராமத்தில் நிறுவப்பட்ட பிரம்மாண்ட தெர்மோ மீட்டர் கடைசியாக மைனஸ் 62 செல்சியஸ் வெப்பநிலை காட்டியுள்ளது. கடும் குளிர் காரணமாக அது செயல்படவில்லை. கடந்த 1933ம் ஆண்டில் இங்கு மைனஸ் 67.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இதுதான்.
இங்கு வசிக்கும் மக்கள் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில்தான் உடை அணிந்திருப்பர். விரல், கால், முகம் என உடலின் எந்த பகுதியை வெளியில் காட்டினாலும், ஐஸ் கட்டியாக உறைந்துவிடும். கண் இமை முடிகளில் கூட ஐஸ்கட்டிகள் படியும். இங்கு பேனாவில் உள்ள மை உறைந்துவிடும். பேட்டரிகள் உறைந்து செயல்படாது. இங்குள்ள மக்கள் வாகனங்களை நிறுத்திவைப்பதில்லை நாள் முழுவதும் இயங்கி கொண்டே இருக்கும். நிறுத்திவைத்தால் அது மீண்டும் ஸ்டார்ட் செய்வது கடினம். இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் கூட, பூமியில் புதைப்பதற்கு தரையை தோண்டுவது கடினம். தீ மூட்டியபின்புதான் தரையை தோண்ட முடியும். ஆழமான சவக்குழி தோண்ட பல நாட்கள் ஆகுமாம்.