பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கான விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் உண்மையை மறைத்தும் திரித்தும் செய்திகளை வெளியிடுவதாகவும், பொய் செய்திகள் வெளியிடுவதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி பொய்யான செய்திகள் வெளியிட்டதில் முதல் இடத்தை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பெற்றதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் பால் கிரக்மேன், டிரம்பின் மாபெரும் வெற்றியால் அமெரிக்க பொருளாதாரம் மீளாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஏபிசி நியூஸ் இரண்டாம் பரிசை பெற்றுள்ளதாகவும், சிஎன்என் மூன்றாம் பரிசை பெற்றுள்ளதாகவும், டைம் இதழ் நான்காம் பரிசை பெற்றுள்ளதாகவும் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாஷிங்டன் போஸ்ட் ஐந்தாம் பரிசை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.