Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
21
அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல் அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்? சூரியனின் இதயத்தோடு இதயம்................!

Sooriyan Gossip - அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல் அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்? சூரியனின் இதயத்தோடு இதயம்................!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,887 Views
அன்று மாலை செல்லையா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேலை முடித்து வீட்டுக்கு வருகிறார். வீட்டு வாசலில் தன் மகளும் பேரப்பிள்ளைகளும் இருப்பதை கண்டு செல்லையா பட்ட ஆனந்தத்திற்கு அளவேயில்லை. ஆனால் செல்லையாவின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியில் சிறுதுளி கூட சுமதியின்(பெயர்மாற்றப்பட்டுள்ளது) முகத்தில் இல்லை. காரணம் அவள் இம்முறை தன் பிறந்த வீட்டுக்கு வந்தது பெற்றோரோடு மகிழ்ந்திருந்த செல்லவல்ல. மாறாக தன் பிறந்த வீட்டுக்குள் மறுபிரவேசம் செய்தது நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடவே. சுமதி, செல்லையா அழகம்மா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதிகளின் தவப்புதல்வி. திருமணமாகி எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை. ஒற்றைப்பிள்ளைக்குப்பின் புழுபூச்சிகூட அழகம்மா வயிற்றை அண்டவில்லை. வறிய குடும்பம் என்றாலும் குறை தெரியாமல் வளர்க்கப்பட்டாள் சுமதி. மாநிறம் வசீகர தோற்றம் குடும்பப்பாங்கான பெண் வறுமைக்காரணமாக வாக்கப்பட்டதோ ஒரு குடிகாரனுக்கு.
காளிதாஸை(பெயர்மாற்றப்பட்டுள்ளது) திருமணம் முடிக்கும்வரை அவன் மதுவுக்கு அடிமையானவன் என்பது செல்லையாவுக்கோ, சுமதிக்கோ தெரியாது பவ்வியமாகவே அவன் பெண் பார்க்க வந்தான். ஆனால் திருமணம் முடிந்து முதல் நாளே வேதாளம் முருங்கை மரமேறியது. அன்றிலிருந்து தினமும் குடித்துவிட்டே வீட்டுக்கு வந்தான் காளிதாஸ். ஏன் குடிக்கிறீர்கள் என்று கேட்டால் அன்று சுமதியின் நிலையோ பரிதாபம் தான். இப்படியாக ஆறு ஆண்டுகள் கழித்தாயிற்று. மூத்தவனுக்கு ஐந்து, இளையவனுக்கு நான்கு, கடைக்குட்டி பெண்பிள்ளைக்கு ஒன்றரை வயதாகிறது. பொறுப்பில்லாத தகப்பன் குடும்ப வறுமை, எலும்பும் தோலுமாய் சிப்பாய் மட்டுமே நகையாக கொண்ட அந்த பிஞ்சுகளை பார்க்கும் போதுசுமதி, செல்லையா அழகம்மா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதிகளின் தவப்புதல்வி. திருமணமாகி எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை. ஒற்றைப்பிள்ளைக்குப்பின் புழுபூச்சிகூட அழகம்மா வயிற்றை அண்டவில்லை. வறிய குடும்பம் என்றாலும் குறை தெரியாமல் வளர்க்கப்பட்டாள் சுமதி.

மாநிறம் வசீகர தோற்றம் குடும்பப்பாங்கான பெண் வறுமைக்காரணமாக வாக்கப்பட்டதோ ஒரு குடிகாரனுக்கு. காளிதாஸை(பெயர்மாற்றப்பட்டுள்ளது) திருமணம் முடிக்கும்வரை அவன் மதுவுக்கு அடிமையானவன் என்பது செல்லையாவுக்கோ, சுமதிக்கோ தெரியாது பவ்வியமாகவே அவன் பெண் பார்க்க வந்தான். ஆனால் திருமணம் முடிந்து முதல் நாளே வேதாளம் முருங்கை மரமேறியது. அன்றிலிருந்து தினமும் குடித்துவிட்டே வீட்டுக்கு வந்தான் காளிதாஸ். ஏன் குடிக்கிறீர்கள் என்று கேட்டால் அன்று சுமதியின் நிலையோ பரிதாபம் தான். இப்படியாக ஆறு ஆண்டுகள் கழித்தாயிற்று. மூத்தவனுக்கு ஐந்து, இளையவனுக்கு நான்கு, கடைக்குட்டி பெண்பிள்ளைக்கு ஒன்றரை வயதாகிறது. பொறுப்பில்லாத தகப்பன் குடும்ப வறுமை, எலும்பும் தோலுமாய் சிரிப்பை மட்டுமே நகையாக கொண்ட அந்த பிஞ்சுகளை பார்க்கும் போது காளிதாஸின் வாழ்க்கை முறையை சுருக்கமாய் சொல்லிவிடலாம்.

பிள்ளைகளுக்காக இத்தனை ஆண்டுகளாய் பொறுத்துப்போன சுமதி இன்று வெளியேறியதும் பிள்ளைக்காகவே. குடி ஒன்றே கதி என்றிருந்த காளிதாஸ் எல்லாவற்றையும் விற்று தீர்த்துவிட்டான். நிரந்தரமாய் தொழிலொன்றும் இல்லாத அவன் அன்று தன் நண்பன் என்று அழைத்து வந்த ஒருவனிடம் தான் மதுவருந்த ஒன்றரை வயதேயான தன் பிஞ்சுக் குழந்தையை விலை பேசியபோதுதான் சுமதி காளியானாள். கடுமையான வாக்குவாதம் இதுவரை தனக்குள்ளே பொத்தி வைத்திருந்த அத்தனை வேதனையினையும் கொட்டித்தீர்த்தாள் இனி ஒருமுறை உன்முகம் காணேன் என சபதம் பூண்டே இன்று தன் பிறந்த வீடு புகுந்திருக்கிறாள்.

காளிதாஸ் மீண்டும் வந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாதவளாய் தன் கரம்பற்றிய பிள்ளைகளோடு தந்தையின் ஒப்புதலுக்காய் காத்திருந்த அவளை பொறுப்பேற்று இன்றோடு இரண்டாண்டுகள் ஓடியாயிற்று. தந்தையின் பாரம் குறைக்க அங்கங்கு வீட்டு வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறாள் புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவுரைத்த பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்! "உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!

அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!" அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்! குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும் குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை! அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல் அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்? இவை பாவேந்தர் பாரதிதாசனின் அர்த்தமுள்ள வரிகளில் சில இந்த வரிகள் உலகிலே மனிதனொருவனுக்கு மனைவியானவள் எத்துணை அவசியமாகிறாள் என்பதனை பறைசாற்றி நிற்கிறது.

ஆனால் வார்த்தைகளால் பெண்மையை போற்றும் உலகம் உண்மையிலும் அவர்களை மதிக்கிறதா என்றால் இல்லை என்பதே தவிர்க்க முடியாத உண்மையுமாகும். உங்கள் பிரச்சனைகள் குறித்தும் மனம் திறந்து பேச அழையுங்கள் 0112346744 அல்லது 0114799750 இலக்கங்களுக்கு. "சூரியனின் இதயத்தோடு எந்தன் சப்தமும் உங்கள் நிசப்தமும் சந்திக்கும் புள்ளியில் வேதனைகளுக்கு ஆறுதல் தேடும் முயற்சி" மீண்டும் சந்திப்போம்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top