Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
1% கோடீஸ்வரர்களிடம் உலகின் 82% சொத்து!!!

news - 1% கோடீஸ்வரர்களிடம் உலகின் 82% சொத்து!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

809 Views
கடந்த ஆண்டு கிடைத்தத வருமானத்தில் 5ல் 4 டாலர் ஒரு சதவிகிதமே உள்ள பணக்காரர்களின் பாக்கெட்டுக்குப் போய்ச் சேர்ந்ததாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது, 2017ம் ஆண்டில். உலகில் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த வருமானத்தில், 82 சதவிகிதம், மேல்தட்டு பணக்காரர்கள் 1% பேரின் கைகளுக்கு சென்றுள்ளது. மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கைக்கு ஒரு துளி கூட சென்று சேரவில்லை என்று அதிர்ச்சியூட்டுகிறது அந்த ஆய்வு.
"பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிட்டு இருக்கான். ஏழை இன்னும் ஏழை ஆகிட்டு இருக்கான்" என்ற 2008ல் வெளியான சிவாஜி பட வசனம் நமக்கு நியாபகம் இருக்கும். அதே வசனத்தை 1999ல் வெளியான முதல்வன் படத்திலும் நாம் கேட்டோம். ஆண்டுகள் ஓடுகின்றனவே தவிர, இந்த சமூக அவலத்தில் இன்னும் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆக்ஸ்ஃபாம் என்ற பிரபல நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில், 80% சொத்துக்கள், 1% கோடீஸ்வரர்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது நம் நாட்டில் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலும் இதே நிலைமை தான். இதற்கு எதிராக தொடர் போராட்டங்களும், விழிப்புணர்வுகளும் நடந்து வந்தாலும், சமூக ரீதியாக எந்த மாற்றமும் நடப்பதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட கோடீஸ்வர வளம் சேர்ப்பு, ஒரு நல்ல பொருளாதாரத்தின் அடையாளம் அல்ல என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். யார் தேர்தலில் நிற்பது என்பது முதல் யார் அமைச்சராவது என்பது வரை அனைத்தையும் முடிவெடுப்பது இதுபோன்ற கோடீஸ்வரர்கள் தான். பணமாகவோ, சொத்துக்களாகவோ, அரசியல் நன்கொடையாகவோ, கோடிக்கணக்கான பணத்தை பெறும் அரசியல்வாதிகள், இதுபோன்ற 'பெரிய முதலாளி'கள் மேலும் வளம் சேர்க்க உதவுகிறார்கள்.

வரி குறைப்பு, சலுகைகள் போன்றவை மூலம் பணக்காரர்கள் செய்யும் உதவிகளுக்கு அரசியல்வாதிகள் கைமாறு செய்கிறார்கள். ஆனால், இவர்கள் இன்னும் உணராத ஒரு விஷயம், மக்கள் கையில் பணம் குறையும்போது, அவர்கள் செய்யும் செலவும் குறையும். பெரும்பாலான மக்கள் தாங்கள் செய்யும் செலவை குறைந்துக் கொண்டே போனால், ஒரு பொருளாதாரம் செழிக்க வாய்ப்பே கிடையாது. இப்படிப்பட்ட பொருளாதார வித்தியாசத்தை நீக்க எந்த நாட்டு தலைவரும் நடவடிக்கை எடுப்பதில்லை. பெரும்பாலான அரசுகள், பெரிய நிறுவனங்களின் வரியை குறைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதற்கு பதிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சலுகைகள் குறைக்கப்படுகின்றன.

பேருந்து, ரயில் போன்ற சேவைகளின் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களையும், கொடிய நோய்க்கு சிகிச்சை பெற லட்ச கணக்கில் செலவழித்து கடனாளியாகும் சாமானியர்களையும், நாம் தினம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பொருளாதாரத்திற்கு ஏற்ற சம்பளம், உறுதியான மருத்துவ காப்பீடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் முதலீடு செய்யும் ஒரு அரசு, கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இதனால் தான் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் விரிந்துகொண்டே செல்கிறது.

இப்பேற்பட்ட உலகளாவிய பிரச்னையை பற்றி உலக பொருளாதார மாநாட்டில் யாரவது பேசுவார்களா, என காத்திருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதற்கான அறிகுறி எதுவும் தற்போது தெரியவில்லை... இந்த ஆய்வு முடிவும் கூட சூப்பர் கோடீஸ்வரர்களிடம் எவ்வளவு சொத்து உள்ளது, ஏழைகளிடம் எவ்வளவு உள்ளது என்பதைத் தெரிவிக்கவில்லை. இதைக் கணக்கிடுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம் என்கிறது ஆய்வு முடிவு.

சூப்பர் கோடீஸ்வரர்கள் என்று இந்த ஆய்வு சொல்லும் டாப் 42 நபர்களின் சொத்து மதிப்பு என்பது, உலகின் பாதிக்கும் மேற்பட்டவர்களின் சொத்து மதிப்படை விட அதிகமாம். இந்த தருணத்தில், கடந்த ஆண்டு ஃபோர்ப் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஃபோர்ப் மதிப்பின்படி, முதல் இடத்தில் மைக்ரோ சாஃப்ட் பில்கேட்சும், இரண்டாவது இடத்தில் வாரன் பஃபட்டும், மூன்றாவது இடத்தில் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பெஸாசும், நான்காவது இடத்தில் இன்டிடெக்ஸ் நிறுவனர் அமன்சியோ ஒர்டிகாவும், ஐந்தாவது இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க்கும் உள்ளனர்.

இந்திய அளவில், முதல் இடத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியும், இந்துஜா குழும நிறுவனர் எஸ்.பி.இந்துஜாவும், மூன்றாவது இடத்தில் சன் பார்மா நிர்வாக இயக்குநர் திலீப் சங்வியும், நான்வாது இடத்தில் பல்லோஞ்சிமிஸ்ட்ரியும், ஐந்தாவது இடத்தில் லட்சுமி மிட்டலும் உள்ளனர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top