Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Jan
26
இந்திய குடியரசு தினம் - பெருமை பெற்ற "பத்ம" விருதுகள் ...!!

Indian republic day - இந்திய குடியரசு தினம் - பெருமை பெற்ற "பத்ம" விருதுகள் ...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

761 Views
இந்தியாவின் 69வது குடியரசு தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது. பல நாடுகளின் பெரும் தலைவர்களும் பங்கேற்புடனும், வாழ்த்துச் செய்திகளுடனும் கோலாகலமாகவும், அதே போன்று உணர்வு பூர்வமாகவும், இந்திய தலைநகர் டெல்லியில் குடியரசு தின நிகழ்வுகள் ஆரம்பித்திருக்கின்றன.
 
 

ஆரம்பிக்கும் இந்த குடியரசு தினக் கொண்டாட்டங்களோடு, சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட துறைகளிலும் நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்த, அதேவேளை நாட்டிற்கு அதியுன்னத  சேவை செய்த மிகச் சிறந்த குடிமக்களை வழமை போன்று கௌரவப்படுத்தத் தவறவில்லை இந்தியத் திருநாடு. 
 
அந்தவகையில், இந்திய மத்திய அரசினால் வழங்கப்படும் அதி உயர் விருதான "பாரத ரத்னா" விருதுக்கு அடுத்த உயர் விருதான "பத்ம" விருதுகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த விருதுகளில் இந்தியாவின் 2வது உயர் விருதான "பத்ம விபூஷன்" விருது  இம்முறை தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் இசையால் பெருமை சேர்த்த 'இசைஞானி' இளையராஜாவிற்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
 
இது பற்றி இசைஞானி கூறுகையில் ‘பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு என்னை கௌரவித்ததாக  நான் கருதவில்லை, மாறாக தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாகவே கருதுகிறேன் என்கிறார். 'இசைஞானி'க்கு கிடைத்த விருது பற்றி தமிழ்த் திரையுலகின் ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் தமது கருத்தைத் தெரிவித்துள்ளனர். 
 
நடிகர் கமல் கூறுகையில், ‘எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது’ என தெரிவித்தார்.  
 
இதேவேளை, நாடு கடந்து அணிகள் கடந்து விருப்பு வெறுப்புகளிற்கு அப்பாற்பட்டு கிரிக்கெட்டை விரும்பும் அனைவரும் நேசிக்கும் ஒரு சிறந்த இந்திய வீரர் மஹேந்திரசிங் டோனிக்கு "பத்ம பூஷன்" விருதை வழங்கி, அவரது தகுதிக்கு பெருமை சேர்த்திருக்கின்றது இந்தியா. அவரோடு சேர்த்து பங்கஜ் அத்வானி (ஸ்னூக்கர்), ராமச்சந்திரன் நாகசாமி (தொல்லியல் துறை), வேத்பிரகாஷ் நந்தா (இலக்கியம் மற்றும் கல்வி),   லட்சுமண் பை (ஓவியம்), அரவிந்த் பாரிக் மற்றும் சாரதா சின்ஹா ( இசைத்துறை), பிலிபோஸ் மர் கிறிசோஸ்டோம் (ஆன்மிகம்) உள்பட பலருக்கு "பத்ம பூஷன்"  விருதுகள் பெருமை சேர்த்திருக்கின்றன.
 
"பத்ம" விருதுகளில் 3வது நிலை விருதான "பத்ம ஸ்ரீ" விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், கிட்டம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த அமிதவ ராய், தமிழகத்தை சேர்ந்த யோகா மூதாட்டி ஞானம்மாள் மற்றும் தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சாதனை புரிந்த தமிழகத்தை சேர்ந்த  ராஜகோபாலன் வாசுதேவன் உள்பட மொத்தம் 73 பேருக்கு "பத்ம ஸ்ரீ" விருதுகள் கௌரவம் கொடுத்திருக்கின்றன. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top