நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலா நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் பல வழிகளில் தமதுஹ் உதவிகளை கொண்டுபோய் சேர்த்து வருகிறார்கள். இந்த மனிதாபிமான பணிகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனி நபர்களும் தமக்கு முடிந்த உதவிகளை வழங்கி வருவதை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில், அக்ஷய் குமார் & ஸ்ருதிஹாசன் நடிப்பில் திரைக்கு வரவுள்ள கப்பார் இஸ் பேக் திரைப்படத்தின் முதல்நாள் வசூலை, நேபாள மக்களுக்காக வழங்க படக்குளுவும் அக்ஷய் குமாரும் தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
ஆனால், இப்பொழுது அக்ஷய் குமார் இதனை மறுத்துள்ளார். என்னடா மனுஷன் இவன்னு ... எல்லோரும் யோசிப்பீர்கள். ஆனாலும், அக்ஷய்குமாரின் வாதமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.
அதாவது, இந்த பொய் வதந்தி தொடர்பாக அக்ஷய் குமார் கருத்து வெளியிட்டுள்ளார். ''நான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கிடையாது. நான் வெறும் நடிகன் மட்டும்தான். யாரும் இந்த முதல்நாள் வசூல் தொடர்பான செய்திகளை வெளியிடவில்லை. இது யாரோ திட்டமிட்ட விதத்தில் பரப்பியுள்ளார்கள். எனவே, இது தொடர்பாக நான் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது'' என்பது அக்ஷய் குமார் வெளியிட்டுள்ள கருத்தாகும்.
-கோடம்பாக்கக் குருவி-