Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
12
ஒரே இடத்தில் வேலை செய்த தாயும் மகளும்.... 38 ஆண்டுகளுக்கு பிறகு தாய் மகள் என அறிந்த ஆச்சரியம்!!

Woman-tracks-down-biological-mom-only-to-find-they - ஒரே இடத்தில் வேலை செய்த தாயும் மகளும்.... 38 ஆண்டுகளுக்கு பிறகு தாய் மகள் என அறிந்த ஆச்சரியம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,834 Views
தன்னை பெற்றெடுத்து, வளர்க்க வழியில்லாமல் அனாதை ஆசிரமத்தில் விட்டுச் சென்ற தாய், தான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணிபுரிவதை பல ஆண்டுகள் கழித்து அறிந்த மகள் ஆனந்தப் பரவசம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் பிரான்ஸைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியாக இருந்த இவரை காதலன் கைவிட்டு சென்றுவிட்டதால் காப்பகம் ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண் குழந்தையை பிரசவித்தார். அதை வளர்க்க வழியில்லாததால் அந்த காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு பிழைப்பு தேடி சென்று விட்டார். அக்குழந்தைக்கு லா-சோன்யா மிச்சேல் கிளார்க் என்று பெயர் சூட்டிய காப்பக நிர்வாகிகள் சிறு வயதிலேயே அவளை ஒரு தம்பதியருக்கு தத்து மகளாக ஒப்படைத்து விட்டனர்.

அந்த தம்பதியரின் செல்ல மகளாக வளர்ந்துவந்த போதிலும் தான் தத்தெடுக்கப்பட்ட மகள்தான் என்பதை அறிந்து கொண்ட சோன்யாவுக்கு இப்போது 38 வயது ஆகின்றது. ஓஹியோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் உள்ள இன்போசிஷன் என்ற கோல் சென்டர் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வருகிறார். என்னதான் தத்தெடுத்த பெற்றோர் பாசத்தை பொழிந்து வளர்த்திருந்தாலும் ‘நம்மை பெற்ற தாயின் முகத்தை ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா..?’ என்ற ஆசையும் ஏக்கமும் சோன்யாவின் மனதில் நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், அவரை எப்படி, எங்கு தேடுவது? என்ற பெருங்குழப்பம் அந்த ஆசைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.

இந்நிலையில், 1964ம் ஆண்டுக்கும் 1996ம் ஆண்டுக்கும் இடையில் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை அம்மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது. அதில் அனாதைகள் காப்பகத்தில் பிறந்த சோன்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்ஸைன் சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது. அந்த பெயரை வைத்து ‘முகப்புத்தகத்தில்' தேடியபோது சோன்யாவுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பணிபுரியும் கோல் சென்டரான இன்போசிஷன் நிறுவனத்தில் தனது தாயும் வேலை செய்கிறார்.

அவரது வசிப்பிடம் தனது விட்டில் இருந்து சுமார் 6 நிமிட பயண தூரத்தில்தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொண்ட சோன்யா மகிழ்ச்சியில் கூத்தாட தொடங்கினார். மூன்றாண்டுகளுக்கு முன்னர் தனது தாயின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து உடனடியாக அவருடன் பேசினார். ’நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க வரலாமா?’ என சோன்யா பாசத்தூண்டில் போட, பிரான்ஸைன் சிம்மன்ஸ் விம்மிவெடித்து, கதறி அழத்தொடங்கி விட்டார். பின்னர், தாயும் மகளும் முதன்முறையாக சந்தித்துக் கொள்ள, இரட்டிப்பு ஆனந்தம். தனது தாயிற்கு ஒரு குடும்பம் இருப்பதை அறிந்து கொண்டவள் தன் தாய் தனிமையின் கொடுமையை அனுபவிக்காதது தனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top