தன்னை கறித்துண்டு போன்று ஒருவர் விற்கப் பார்த்தார் என்று நடிகை அமலா பால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.மலேசியாவில் இடம்பெறும் கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காக பயிற்சிகளை பெற்ற போது, தனக்கு தொழில் அதிபர் அழகேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என நடிகை அமலா பால் காவல்துறையில் முறையிட்டார்.
இதனையடுத்து சந்தேக நபரான அழகேசனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பாலியல் தொல்லையினை வெளிப்படையாகவும் தைரியமாகவும் காவல்துறையில் முறையிட்ட அமலா பாலை பாராட்டி நடிகர் விஷால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.