Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Feb
14
நண்பர்களின் பாசப் போராட்டம்..!! தங்களுடன் நண்பர்களின் உடலை சுமந்து சென்ற சம்பவம்...!!

Indian news - நண்பர்களின் பாசப் போராட்டம்..!! தங்களுடன் நண்பர்களின் உடலை சுமந்து சென்ற சம்பவம்...!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,063 Views
நீர் வீழ்ச்சியில் மூழ்கி பலியான நண்பர்களின் உடலை தங்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போது நண்பர்கள் காவல்துறையிடம் சிக்கி கொண்டனர். தமிழ் நாட்டின் சென்னை கொளத்தூர் தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் பகவான்சிங் மகன் யஷ்வந்த் (19). கல்லூரியில் படித்து வந்தார்.



இவர் தனது நண்பர்களான யாசின், ராஜாராவ், பிரபாகரன் ஆகியோருடன் ஆந்திர மாநிலம் தடா நீர் வீழ்ச்சிக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

கல்லூரி மாணவர் யஷ்வந்த் நீர்வீழ்ச்சியில் குதித்தபோது பாறைகள் நடுவில் சிக்கி கொண்டார். அவரை காப்பாற்ற யாசின் முயன்றார். அதனால் அவரும் சிக்கி கொண்டார்.

இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதைபார்த்த நண்பர்கள் அலறினார்கள். உடனே கிராம மக்கள் அங்கு வந்து தண்ணீரில் மூழ்கிய 2 பேரின் உடல்களை மீட்டு வெளியே எடுத்து வந்தனர்.

ஆனால் ஆந்திர காவல்துறையிடம் தகவல் தெரிவிக்காமல் 2 பேரின் உடல்களை மோட்டார்சைக்கிளில் வைத்து சென்னைக்கு கொண்டு செல்ல நண்பர்கள் 3 பேரும் முடிவு செய்தனர்.

அதன்படி ஒரு மோட்டார்சைக்கிளில் யஷ்வந்த் உடலை நடுவில் வைத்தபடி 2 பேர் கொண்டு சென்றனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் யாசின் உடலை கயிற்றில் கட்டியபடி கொண்டு சென்றனர்.

சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் சென்ற போது ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் இருந்த யஷ்வந்த், யாசின் உடல்கள் வீதியில் விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரிகள் 3 பேரிடம் விசாரித்தனர். 2 பேரும் நீர் வீழ்ச்சியில் மூழ்கி இறந்து விட்டனர். உடல்களை மோட்டார்சைக்கிளில் வைத்து சென்னைக்கு கொண்டு செல்கிறோம் என்றனர். இதையடுத்து 2 வாலிபர்களின் உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையில் தகவல் தெரிவிக்காமல் உடலை ஏன் சென்னைக்கு கொண்டு சென்றனர் என்பது குறித்து 3 பேரிடம் விசாரித்து வருகிறார்கள். வாலிபர்கள் பலியானது குறித்து அவர்களது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று காலை புறப்பட்ட 5 பேரும் செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்ததாக அவர்களது நண்பர்கள் தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top